Also Watch
Read this
By: Web Team

மாம்பழத்தின் விலை வீழ்ச்சியை அரசு தடுக்காததால் உழவர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டில் ஒரு டன் மாம்பழம் சராசரியாக 28 ஆயிரம் ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் 4 ஆயிரமாக வீழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டதோடு, இதனால் உழவர்களுக்கு கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.
மேலும், மாம்பழம் கொள்முதல் செய்யும் வணிகர்கள் தங்களுக்குள் ரகசிய கூட்டணி அமைத்து விலையை குறைத்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், பாதிக்கப்பட்ட உழவர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved