கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் அதிமுக நிர்வாகி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 8 ஆம் தேதி சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்திய குனியமுத்தூர் வட்ட செயலாளர் ராஜாவை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி செயலாளர் ரவி மீதும் பேரூராட்சி தலைவியின் கணவர் உள்ளிடோர் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ள அவர், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.