சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவது தொழில்நுட்ப உயர்கல்வியை கேலிக் கூத்தாக்குவதாகும் என பாமக தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், பேராசிரியர்களை தினக்கூலி அல்லது மதிப்பூதிய அடிப்படையில் மட்டுமே நியமிக்க பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், உயர்கல்வியின் தரம் மற்றும் சமூக நீதியை குலைக்கும் குத்தகை முறை ஆசிரியர் நியமனங்களை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது எனவும், காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் முறையான வழிகளில் நிரப்பப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.