பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்தது. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியின் சீரிய தலைமையின் கீழ் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்தார். பாஜகவுடன் கூட்டணியில் இணைவதற்கு அதிமுக சார்பில் எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கூட்டணியில் ஒத்த கருத்துள்ள பிற கட்சிகளும் இடம்பெறும் என்றவர், சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு எத்தனை தொகுதிகள், அமைச்சரவையில் பங்கு பற்றி தற்போது பேசவில்லை என்றவர், அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது என விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இவ்வாறு பதிலளித்தார்.