news-tamil-logo

3/16/2026, 11:46:31 AM

news-tamil-logo
more
Home nigal-thagavu மகள்களை விலை பேசிய கொடூர தாய்... பெட்ரூமில் வைத்து.. தினமும் சித்ரவதை... தந்தையிடம் கதறிய 13 வயது மகள்..
tv

Also Watch

tv

Read this

மகள்களை விலை பேசிய கொடூர தாய்... பெட்ரூமில் வைத்து.. தினமும் சித்ரவதை... தந்தையிடம் கதறிய 13 வயது மகள்..

நிகழ்தகவு

Posted on: Feb 28, 2025 07:25 AM

220

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வழக்கம்போல காலையில வீட்டு வாசல்ல உக்காந்து நீயூஸ் பேப்பர் படிச்சிட்டு இருந்துருக்காரு தந்தை... அப்போ, முகம்லாம் வீங்கிபோய் பெட்ரூம்ல இருந்து சோர்வா வந்த 13 வயசு மகள், அவரோட பக்கத்துல போய் உக்காந்துருக்காங்க... என்னம்மா ஸ்கூலுக்கு கிளம்பலயா..? இங்க வந்து உக்காந்துருக்க அப்டினு கேட்டுருக்காரு தந்தை... அதுக்கு, சிறுமி எந்த பதிலும் சொல்லாம எதையோ யோசிச்சிட்டு இருந்துருக்காங்க... நம்ம பேசிட்டு இருக்கோம் எதுவும் பேசாம மவுனமா இருக்காளேன்னு பேப்பர கீழ வச்சிட்டு மகள பாத்துருக்காரு... அப்போ, சிறுமியோட முகத்துல அங்க அங்க சின்னதா நக கீறல்கள இருக்குறத பாத்த தந்தை, என்னம்மா ஆச்சு..? ஏன் ஒருமாதிரி இருக்க..? முகத்துல என்ன காயம்னு கேள்வியா கேட்டுருக்காரு... ஏன்ப்பா.. உங்களுக்கு எதும் தெரியாதா..? இல்ல தெரியாத மாதிரி இருக்கீங்களான்னு கேட்டுருக்காங்க சிறுமி... மகள் எதுக்காக இப்படி பேசுறா அப்டிங்குறது தந்தைக்கு சுத்தமா புரியல... நீ என்ன சொல்றனு எனக்கு ஒன்னும் புரியல, என்னாச்சுன்னு தெளிவா சொல்லுன்னு கேட்டுருக்காரு தந்தை.

அப்போ, மகள் சொன்னத கேட்டு தந்தை நெஞ்சு வெடிக்குற நிலைக்கு போயிருக்காரு... அக்காவையும், என்னையும் அம்மா கட்டாயப்படுத்தி ரெண்டு இளைஞர்களோட தப்பா நடந்துக்க சொல்றாங்கப்பா... நைட் நீங்க தூங்கனதுக்கு அப்புறம், அந்த இளைஞர்கள வீட்டு வரவச்சி, அவங்களோட எங்கள பெட் ரூமுக்கு அனுப்பி வச்சிராங்க... இளைஞர்கள் எது பண்ணாலும் சத்தம் போடா கூடாதுன்னு மிரட்டுறாங்கப்பான்னு சொல்லி அழுதுருக்காங்க... மகள் சொன்னத கேட்டு கொந்தளிச்சி போனவரு, நேரா ஸ்டேஷனுக்கு போய் மனைவி மேல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காரு... அவரு சொன்னத கேட்டதும், அதிர்ச்சியான போலீஸ், சென்னை திருவொற்றியூர்ல இருக்குற சிறுமியோட வீட்டுக்கு போயிருக்காங்க... என்ன விஷயம் சார்..? எதுக்காக இங்க வந்துருக்கீங்க அப்டின்னு கேட்டுருக்காங்க சிறுமியோட அம்மா... உங்கள் மகள்களுக்கு நீங்க டார்ச்சர் குடுக்குறதா புகார் வந்துருக்குது... அது விஷயமாதான் உங்கள விசாரிக்க வந்துருக்கோம்னு சொல்லிருக்காங்க காவலர்கள்... என்ன சார் சொல்றீங்க என் மகளுக்கு நான் டார்ச்சர் குடுக்குறனா..? நீங்க வீடு மாறி வந்துட்டீங்கனு நினைக்கிறேன் சொல்லிருக்காங்க... அந்த நேரத்துல, வீட்டுக்குள்ள வந்த கணவன், வீடலாம் மாறி வரல கரெக்ட்டான இடத்துக்குதான் வந்துருக்காங்க நான்தான் உன்மேல கம்ப்ளைண்ட் குடுத்தேன்னு சொல்லிருக்காரு.. கூடவே 13 வயசு மகளும் இருந்தத பாத்த தாய், எல்லாத்தையும் அவங்க அப்பாக்கிட்ட சொல்லிட்டாளோன்னு பதறிருக்காங்க..



எதுக்காக என்மேல கம்ப்ளைண்ட் குடுத்தீங்கனு பதட்டத்தோடவே கேட்டுருக்கங்க மனைவி... அப்போ, மகள் சொன்னத ஒன்னுவிடாம் கேட்டு அவங்கள அடிக்க பாஞ்சிருக்காரு... அதுக்கப்புறம், மனைவிய ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போய் போலீஸ் விசாரண பண்ணப்பதான், பல திடுக்கிடு தகவல்களலாம் வெளிச்சத்துக்கு வந்துருக்குது... 38 வயசான சிறுமியோட தாய், வாரவாரம் வண்ணாரப்பேட்டையில நடக்குற மத வழிபாடுல கலந்துருக்காங்க.. அப்போ, அவங்களுக்கு அங்க முகமது ரபிக், அப்துல் கலாம் ரெண்டு பேரு பழக்கமாகிருக்காங்க... மொதல்ல தம்பி மாதிரி பழக ஆரம்பிச்ச ரெண்டு இளைஞர்களும், நாளடைவுல அந்த பெண்கூட எல்லை மீறி பழகிருக்காங்க... தெனமும் வீட்டுக்கு வந்துட்டு போறதுமாவும் இருந்துருக்காங்க அந்த இளைஞர்கள்.. அதப்பாத்த, பெண்ணோட கணவர், எதுக்காக இவங்க அடிக்கடி வீட்டுக்கு வர்றாங்க..? வீட்டுல ரெண்டு வயசு பொண்ணுங்க இருக்காங்க, அக்கம் பக்கத்துல என்ன நினைப்பாங்கனு சொல்லி சத்தம் போட்டுருக்காரு...

ஆனா, அந்த பெண்ணுக்கு ரெண்டு மகள்கள் இருக்குறத தெரிஞ்சிட்ட அப்புறதான், இளைஞர்கள் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பிச்சிருக்காங்களே... குடும்ப கஷ்டத்துல இருந்த பெண்ணுக்கு கேக்குறப்பலாம் ரெண்டு பேரும் காசு குடுத்துருக்காங்க... அழகான ரெண்டு மகள்கள வச்சிட்டு நீ ஏன் கஷ்ட பட்ற..? நாங்க உனக்கு பணம் குடுக்குறோம், உன்னோட மகள்கள எங்கக்கூட ஜாலிய இருக்க சொல்லுன்னு அந்த இளைஞர்கள் சொல்லிருக்காங்க... அப்படி சொன்னதும் அவனுங்கள கண்டிக்காம, மகள்கள் கட்டாயப்படுத்தி இளைஞர்களோட பாலியல் ரீதியா ஈடுபட சொல்லி டார்ச்சர் பண்ணிருக்காங்க தாய்... இந்த விஷயம் கணவருக்கு தெரியாம பாத்துக்கணும் அப்டிங்குறதுக்காக, இரவு நேரத்துல அவருக்கு பால்ல தூக்க மாத்திரை கலந்து குடுத்து மகள்கள அசிங்க வேலையில ஈடுபடுத்திருக்காங்க... இந்த அத்தனை உண்மைகளும் போலீஸ் விசாரணையில அம்பலமாயிருக்குது... அடுத்து, சிறுமிகளோட தந்தை குடுத்த புகார வச்சி, தாயையும், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முகமது ரபிக், அப்துல் கலாம் மூணுபேரு மேலயும் போக்சோ வழக்குப்பதிவு பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க போலீஸ்...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் வெற்றி பெற முடியாது

1
11 mins agoshare
vijay in electionbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved