ஆசை ஆசையாய் பெத்து வளத்த மகன் பிறந்த அஞ்சே மாசத்துல உயிரிழந்துட்டானே அப்டிங்குற வேதனையில இடிஞ்சிபோய் உக்காந்துருந்த சுரேஷ் கண்ணுல ஒரு செல்போன் தென்பட்ருக்குது.. இது யாரோட செல்போன்? உறவினர்கள் யாராவது மறந்து வச்சிட்டாங்களானு நெனச்சிக்கிட்டே அத ஆன் பண்ணிருக்காரு.. பாஸ்வேர்ட் இல்லாததால ஆன் பண்ணினதும் ஓப்பன் ஆகிருக்குது.. டிஸ்பிளேல மனைவியும், பக்கத்து வீட்டுப் பொண்ணும் சேர்ந்து இருக்குற மாதிரி போட்டோ இருந்தத பாத்த சுரேஷ், கால் ஹிஸ்ட்ரிய பாத்துருக்காரு.. அதுல இன்கமிங், அவுட்கோயிங் எல்லாமே ஒரே ஒரு நம்பர் மட்டும்தான் இருந்துருக்குது.. அதேமாதிரி வாட்ஸ்அப் போய் பாத்தாலும் ஒரே ஒரு நம்பர்ல இருந்துதான் வீடியோ கால், வாய்ஸ் ரெக்கார்டு, போட்டோஸ், வீடியோஸ் எல்லாமே இருந்துருக்குது.. அதுல இருந்த போட்டோவ பாத்துட்டு, வாய்ஸ் ரெக்கார்டை கேட்ட சுரேஷ் அப்படியே உறைஞ்சி போய்ட்டாரு.. கணவன் சுரேஷ் அந்த போனை கையில எடுத்து வாட்ஸ்அப்ப ஓப்பன் பண்ணினதும் அங்க இருந்து அவரோட மனைவி படபடனு ஓடிருக்காங்க.. அந்த ஓட்டத்துக்கான காரணம் அதுக்குப்பிறகுதான் எல்லாருக்குமே தெரிஞ்சது.. கிருஷ்ணகிரி ஒசூர் பக்கத்துல சின்னட்டி கிராமத்தை சேர்ந்தவர்தான் சுரேஷ்.. பெயிண்ட் அடிக்கிற வேலை பாத்துட்டு இருக்குற இவரு பாரதிங்குற பொண்ண கல்யாணம் பண்ணிருக்காரு.. இந்த தம்பதிக்கு ரெண்டு மகள்கள் இருக்குறப்ப 3 ஆவதா கர்ப்பமாகிருக்காங்க பாரதி.. ரெண்டு மகள்களே போதும், 3 ஆவதா உருவாகிருக்குற கருவை கலைச்சிடலாம்னு சொல்லிருக்காங்க பாரதி.. ஆனா, நமக்கு கண்டிப்பா ஒரு மகன் வேணும், மகள்களுக்கு துணைக்கு ஒரு தம்பி வேணும், அதனால 3 ஆவது குழந்தைய பெத்துக்கலாம்னு சொல்லிருக்காரு சுரேஷ்.. அதனால, கணவரோட கட்டாயத்துக்கு 3 ஆவதா ஒரு ஆண் குழந்தைய பெத்துருக்காங்க பாரதி.. நினச்சமாதிரியே மகன் பிறந்ததால சுரேஷ் மகனை தங்கமா வளத்துருக்காரு.. இந்த சந்தோஷம் அஞ்சே மாசந்தான் நிலைக்கும், அதுக்குப்பிறகு பெத்த தாயாலயே மகனோட உசுருக்கு ஆபத்து வரும்னு சுரேசுக்கு தெரியாமபோச்சு..25 வயசான பாரதிக்கும் எதிர்வீட்டுல இருந்த 22 வயசு இளம்பெண்ணான சுமித்ராவுக்கும் ஓரினச்சேர்க்கை ஏற்பட்ருக்குது.. சுமித்ராவோட பேர சுமினு நெஞ்சுல பச்சை குத்திருக்காங்க பாரதி.. அத பாத்து ஷாக்கான அவங்களோட கணவருக்கு அப்பதான் மனைவியோட ஓரினச்சேர்க்கை விவகாரமே தெரிஞ்சிருக்குது.. வெளிய தெரிஞ்சா அசிங்கமே, ஊர் உலகம் சிரிக்குமேனு அவமானப்பட்ட சுரேஷ், மனைவிக்கு பொறுமையா அட்வைஸ் பண்ணிருக்காரு.. நமக்கு கல்யாணமாகி 3 பிள்ளைகள் இருக்காங்க, அவங்களோட எதிர்காலத்த பாக்கணும், அதேமாதிரி சுமித்ராவுக்கும் இன்னும் திருமணம் ஆகல, அந்த பொண்ணுக்கும் ஒரு எதிர்காலம் இருக்குது, இதெல்லாம் ரொம்ப தப்பு, யாருக்காவது தெரிஞ்சா நம்ம குடும்ப மானமே போயிரும்னு சொன்ன சுரேஷ் இதுக்குமேல இந்த வேலைய பாக்க வேண்டாம்னு கண்டிச்சிருக்காரு.. அதேமாதிரி, சுமித்ராவுக்கும் அட்வைஸ் பண்ணிருக்காரு.. அப்போ, நாங்க செஞ்சது தப்புதான் இனிமேல் இப்படி பண்ணமாட்டோம்னு மன்னிப்பு கேட்ருக்காங்க.. அந்த மன்னிப்பு போலியானதுனு சுரேசுக்கு அப்போ தெரியல..அடுத்து வழக்கம்போல சுரேஷ் வேலைக்குப்போனதும் பாரதியும், சுமித்ராவும் அடிக்கடி ஓரினச்சேர்க்கையில ஈடுபட்ருக்காங்க.. அக்கம்பக்கத்துல உள்ளவங்களுக்கும் நடந்த எந்த விஷயமும் தெரியாததால ரெண்டுபேரையுமே கண்டுக்கல.. இதுக்குமத்தியில பாரதியும், சுமித்ராவும் ஓரினச்சேர்க்கையில ஈடுபடும்போது பாரதியோட 3 ஆவது ஆண் குழந்தை பசிக்காக அழுதுருக்குது.. அதனால, குழந்தைக்கு தாய்ப்பால் குடுக்க வேண்டிய கட்டாயம் வந்துருக்குது பாரதிக்கு.. அது, சுமித்ராவுக்கு தொந்தரவா இருந்துருக்குது.. தினமும் குழந்தையோட அழுகை சத்தத்தால டென்ஷன் ஆன சுமித்ரா, உன் மகனை கொன்னுடு, அப்பதான் நாம இடையூறு இல்லாம ஓரினச்சேர்க்கையில ஈடுபட முடியும்னு சொல்லிருக்காங்க.. அதோட, பாரதிக்கு வாட்ஸ்அப்லயும் வாய்ஸ் ரெக்கார்டு அனுப்பிருக்காங்க சுமித்ரா.. கணவருக்கு ஓரினச்சேர்க்கை விவகாரம் தெரிஞ்சவுடனேயே சுமித்ராகிட்ட பேசுறதுக்காகவே தனியா செல்போன் பயன்படுத்திருக்காங்க பாரதி.. அந்த செல்போன்லதான் சுமித்ரா வாய்ஸ் ரெக்கார்டு அனுப்பிருக்காங்க.. அந்த வாய்ஸ் ரெக்கார்ட கேட்டு கோபப்பட வேண்டிய தாய் பாரதி சுமித்ராவோட ஆசைய நிறைவேத்த பாத்துருக்காங்க.. சுமித்ராவோட பெயரையே டாட்டூ போட யோசிக்காத பாரதிக்கு தன்னோட குழந்தைய கொல்றதுக்கும் யோசிக்கல.. மதியநேரம் குழந்தையோட வாயையும், மூக்கையும் பொத்தி மகனை கொலை செஞ்ச பாரதி, அந்த செல்போன்ல போட்டோ எடுத்து சுமித்ராவுக்கும் அனுப்பிருக்காங்க.. நீ சொன்ன மாதிரியே குழந்தைய கொன்னுட்டேன்னு சுமித்ராவுக்கு தகவல் குடுத்த அடுத்தநொடியே, உயிரிழந்த குழந்தையை தூக்கிட்டு வெளியே ஓடிவந்து ஒரு நாடகம் ஆடிருக்காங்க.. பால் குடிச்சிட்டு இருக்கப்ப இருமல் வந்தது, திடீர்னு குழந்தைக்கு மூச்சு பேச்சு இல்லனு கதறி அழுத பாரதி, பக்கத்து தெருவுல நின்னுட்டு இருந்த கணவருக்கும் போன் பண்ணி தகவல் குடுத்துருக்காங்க.. அடுத்து குழந்தையை தூக்கிட்டு கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓடிருக்காரு சுரேஷ்.. அங்க செக் பண்ணின டாக்டர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துட்டதாகவும், போஸ்ட் மார்டம் பண்ணி தர்றதாகவும் சொல்லிருக்காங்க.. ஆனா, தவமிருந்து பெத்த மகன் உடம்புமேல கத்தி படக்கூடாதுனு கண்ணீர் வடிச்ச சுரேஷ் போஸ்ட் மார்டம் பண்ண வேண்டாம் டாக்டர்னு பிடிவாதாமா நின்னுருக்காரு.. அதனால, டாக்டர்களும் அதுக்குமேல என்ன பண்றதுனு தெரியாம குழந்தைய சுரேஷ்கிட்ட ஓப்படைச்சிட்டாங்க.. அதுக்குப்பிறகு குழந்தையோட சடலத்த வீட்டுக்கு கொண்டு வந்த சுரேஷ் உறவினர்களோடபோய் குழிதோண்டி அடக்கம் பண்ணிருக்காரு.. சம்பவம் நடந்த மறுநாள் கவலையில வீட்டுல உக்காந்துருந்த சுரேஷ் கண்ணுல ஒரு சொல்போன் தென்பட்ருக்குது.. மகன் உயிரிழந்ததால துக்கம் விசாரிக்க வந்த யாரோ செல்போனை தவறவிட்ருக்கலாம், அவங்ககிட்ட குடுக்கலாம்னு அந்த செல்போனை எடுத்து பாத்தப்பதான் சுமித்ரா பாரதிக்கு அனுப்புன வாய்ஸ் ரெக்கார்டும், பாரதி தன் குழந்தைய கொன்னு சுமித்ராவுக்கு அனுப்பின போட்டோவும் இருந்துருக்குது.. சுரேஷ் கையில செல்போனை எடுத்து பாத்ததுமே உஷாரான பாரதி, நடந்த எல்லா விஷயமும் கணவருக்கு தெரிஞ்சிரும்னு பயந்துபோய் வீட்டவிட்டு ஓடிருக்காங்க.. பக்கத்து தெருவுல உள்ள ஒரு உறவினர் வீட்டுக்குப்போன பாரதிக்கு கணவர் அந்த செல்போன் ஆதாரத்தோட போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுக்கப்போறாருங்குற தகவல் தெரிஞ்சிருக்குது.. அதனால, அந்த உறவினர்கிட்ட செல்போன் வாங்கி கணவர் சுரேசுக்கு கால் பண்ணிருக்காங்க.. ஏதோ ஒரு கோவத்துல பண்ணிட்டேன், நான் பண்ணது தப்புதான், இனிமே அப்படி பண்ணமாட்டேன், என்னை மன்னிச்சிடு, இனிமேல் நீ சொல்றத எல்லாத்தையுமே கேக்குறேன், உன் கால்லகூட விழுறேன், நீ என்னை அடிச்சி போட்டாகூட நான் கேக்கமாட்டேனு சொல்லிருக்காங்க.. அதுக்கு, இதெல்லாம் செஞ்சா என் பையன் திரும்பி வருவானா? உன்னால என் மகனை திரும்ப குடுக்க முடியுமானு கேட்ட சுரேஷ், குழந்தைய எப்படி கொலை செஞ்ச? உண்மைய சொன்னா மன்னிச்சு விட்டுருவேனு சொல்லிருக்காரு.. நடந்த எல்லாத்தையுமே மனைவி வாயாலேயே கேட்டு அத ரெக்கார்டு பண்ணி போலீஸ்ல காட்டணும்னு பாரதிக்கிட்ட பொறுமையா பேசிருக்காரு சுரேஷ்.. அப்பவும், பையன் பால் குடிச்சான், இருமல் வந்தது, கழுத்து மேல கை வச்சேன், எனக்கு சாகடிக்கிற எண்ணமெல்லாம் இல்லனு மழுப்பிருக்காங்க பாரதி.. ஆனா, விடாத சுரேஷ் உண்மையா சொன்னா விட்ருவேனு அழுத்தமா பேசிருக்காரு.. அதனால, சமாளிக்க முடியாத பாரதி ஆமா.. நான்தான் குழந்தையோட மூக்கையும் வாயையும் பொத்தி கொலை செஞ்சேன்னு சொல்லிருக்காங்க.. அமைதியா பேசி, மனைவி வாயாலேயே மொத்த உண்மையையும் கரந்த சுரேஷ் பாரதி, சுமித்ரா ரெண்டுபேர்மேலயும் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடுத்துருக்காரு.. அதுக்குப்பிறகு, ரெண்டு பெண்களையும் கைது செஞ்ச காவல்துறையினர், புதைக்கப்பட்ட குழந்தையோட சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்ற வேலையில ஈடுபட்ருக்காங்க.. எதிர்வீட்டு இளம்பெண்ணோட ஆசைக்காக பிஞ்சு குழந்தைய கொன்ன தாயோட செயல் ஒட்டுமொத்த கிராம மக்களையே அதிர்ச்சியில உறைய வச்சிருக்கு..