வீட்டு வாசலில் சடலமாக கிடந்த இளம்பெண். திருமணமான ஐந்தே மாதத்தில் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரி. இளம்பெண்ணை துடிதுடிக்க கொன்று, மாமனாரின் வீட்டு வாசலில் வீசிச் சென்ற கொடூரம். சிசிடிவி காட்சியை வைத்து துப்பு துலக்கிய காவல்துறையினர். ஈவு இரக்கமற்ற கொடூரன் சிக்கினானா? நடந்தது என்ன?வீட்டு வாசலில் நின்று கதறி அழுத தந்தை ஜனவரி 16-ந் தேதி. 55 வயசு மதிக்கத்தக்க நபர் ஒருத்தரு வழக்கம்போல, வீட்டு கதவ திறந்து வெளியே வந்துருக்காரு. அப்படி வெளியே வந்ததும் அந்த நபர், திடீர்னு கத்தி கூப்பாடு போட்டுருக்காரு. அவரோட சத்தத்த கேட்டு வீட்டுக்குள்ள இருந்த மனைவி, மகன், அக்கம்பக்கத்துல உள்ளவங்க எல்லாரும் பதறியடிச்சிட்டு ஓடி வந்துருக்காங்க. அப்படி வெளியே வந்து பாத்தவங்களுக்கும் ஒரு நிமிஷம் உயிரே நின்னு போயிருக்குது. ஏன்னா, வீட்டு வாசல்ல அந்த நபரோட மூத்த மகள் சடலமா கெடந்துருக்காங்க. பெத்து வளத்து வேற வீட்டுக்கு கட்டி கொடுத்த பொண்ணு, விடிஞ்சும், விடியாமலும் வீட்டு வாசல்ல சடலமா கிடந்தத பாத்ததும் பெத்தவங்க துடிதுடிச்சு போயிட்டாங்க. போலீஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்அடுத்து, விஷயம் தெரிஞ்சு சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ்காரங்க சடலத்த மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வச்சிட்டு விசாரணையில இறங்குனாங்க. முதற்கட்டமா, இளம்பெண்ணோட அப்பா, அம்மாக்கிட்ட விசாரணை பண்ணாங்க. அதோட, அந்த பகுதில உள்ள சிசிடிவி கேமராக்களையும் செக் பண்ணாங்க. அதுல, அதிகாலை நாலு மணியளவுல அந்த பகுதில வந்த ஒரு கருப்பு நிற ஸ்கார்பியோ கார்ல இருந்து இறங்குன ஒரு இளைஞர் அங்க இங்கன்னு சுத்திமுத்தி பாத்துட்டு, காருக்குள்ள இருந்து இளம்பெண் சடலத்த இழுத்து அந்த வீட்டு வாசல வீசிட்டு போன காட்சி பதிவாகிருந்துச்சு. அதுக்குப்பிறகு, அந்த சிசிடிவி காட்சிய இளம்பெண்ணோட பெற்றோர்கிட்ட காட்டி அதுல இருக்குற இளைஞர் யாருன்னு விசாரிச்சப்பதான் ஏகப்பட்ட அதிர்ச்சி விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துருக்கு. சிசிடிவி காட்சியில் பதிவாகிருந்த இளைஞர் யார்?பீகார் மாநிலம் வைஷாலி-ங்குற பகுதிய சேர்ந்தவர் ராஜ்குமார். இவரோட மூத்த மகள் சரிதாவுக்கும், ரோக்பூர சேர்ந்த சத்யேந்திர குமாருக்கும் கடந்த மே 9-ந் தேதி இருவீட்டார் பெரியவங்களும் சேந்து கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. கல்யாணத்தப்போ, சரிதாவோட பெற்றோர், பல லட்ச ரூபாய் செலவு பண்ணி மகளுக்கு ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. அதுமட்டுமில்ல, தங்க நகைகள், வீட்டுக்கு தேவையான சாமான்கள்னு ஏகபோகமா வரதட்சணையும் கொடுத்திருக்காங்க. அளவுக்கு அதிகமா வரதட்சணை வாங்கிட்டுதான் சரிதாவ கல்யாணம் பண்ணிருக்காரு SI சத்யேந்திரா. கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம், ரெண்டு பேரோட வாழ்க்கையும் சுமூகமாத்தான் போய்ட்டு இருந்துருக்கு. ஆனா அதுக்கப்புறம் சத்யேந்திராவோட அடாவடித்தனம் எல்லை மீறி போய்ருக்கு. SI-யான சத்யேந்திரா தன்னோட அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி லட்சக்கணக்குல பணம் வேணும், அந்த பணத்தெல்லாம் உங்க அப்பா வீட்டுல இருந்து வாங்கிட்டுவான்னு சொல்லி மனைவி சரிதாவ அடிச்சு கொடுமைப்படுத்திருக்காரு.கூடுதல் வரதட்சணை கேட்டு சரிதாவை துன்புறுத்திய கணவன்எனக்கு என்ன செய்யனுமோ அதை எல்லாத்தையும் கல்யாணத்தப்பவே செஞ்சிட்டாங்க, நீங்க எப்ப பாத்தாலும் பணம் வேணும் நகை வேணும்னு கேட்டா என்ன அர்த்தம்னு சரிதா பதிலுக்கு சண்ட போட்டுருக்காங்க. நான் சம்பாதிக்கிற மொத்த பணத்தையும் உங்க கிட்ட தான கொடுக்குறேன், அது பத்தாதுன்னு எங்க வீட்டுல இருந்து வேற பணம் கேட்டா எப்படின்னு கோவப்பட்டிருக்காங்க. என் கிட்டையே திமிரா பேசிறியான்னு கேட்டு, சத்யேந்திரா, மனைவிய கம்பால அடிச்சும், ரூமுக்குள்ள அடச்சி வச்சும் காட்டுமிராண்டித்தனமா சித்ரவதை பண்ணிருக்கான்.சரிதாவை அடித்து சித்ரவதை செய்த கொடூர சத்யேந்திராஇந்த விஷயம் சரிதாவோட பெற்றோருக்கு தெரிஞ்சு சொந்தக்காரங்களோட வந்து நியாயம் கேட்டுருக்காங்க. அப்போ, சத்யேந்திராவோட உறவினர்கள் சிலரு, இனிமே இப்படி நடக்காம பாத்துக்கிறோம்னு சொல்லிருக்காங்க. அத நம்பி, மகள, கணவர் வீட்டுல விட்டுட்டு போய்ருக்காங்க சரிதாவோட பெற்றோர். ஆனா அதுக்கப்புறமும் சத்யேந்திராவோட அட்டூழியம் குறையல. பணம், நகை கேட்டு மனைவிய சித்ரவதை பண்ணிருக்கான். என்ன ஆனாலும் எங்க வீட்டுல இருந்து ஒரு ரூபாய் பணம் கூட வராதுன்னு சரிதா கோபமா சொன்னதும், சத்யேந்திரா, தன்னோட நண்பர்களோட சேந்து அவங்கள இரும்பு கம்பியால தாக்கிருக்காரு. இந்த சம்பவம் நடுராத்திரி 2 மணிக்கு நடந்துச்சு.நடுராத்திரியில் சித்ரவதையை அனுபவித்த சரிதாசரிதாவோட கழுத்துல இரும்பு கம்பிய வச்சு குத்துனதால, அவங்க சம்பவ இடத்துலே உயிரிழந்துட்டாங்க. அதுக்குப்பிறகு, மனைவி சரிதா சடலத்த தன்னோட ஸ்கார்பியோ காருக்குள்ள வச்சு அவங்க பெற்றோர் வீட்டு வாசல்ல தூக்கி வீசிட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிருக்கான் கொடூரன் சத்யேந்திரா. சரிதாவோட அம்மா, அப்பா கொடுத்த புகாரையும், சிசிடிவி காட்சியையும் வச்சு, வழக்குக்குப்பதிவு பண்ண போலீஸ், சரிதா கொலை கேஸ்ல உடந்தையா இருந்த ரெண்டு பேர அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அதே நேரம், போலீஸ் கண்ணுல சிக்காம ஆட்டம் காட்டிட்டு இருக்க சத்யேந்திராவ பிடிக்க ஸ்பெஷல் டீம் அமைச்சு காவலர்கள் தீவிரமா தேடிட்டு இருக்காங்க. Related Link மூதாட்டியை குழி தோண்டி புதைத்த குடும்பத்தினர்