பக்கத்து வீட்டிலிருந்து கேட்ட இளைஞரின் கதறல் சத்தம், பதறியடித்து கொண்டு ஓடிய அக்கம் பக்கத்தினர். கழுத்து அறுபட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த 17 வயது சிறுமி.. பக்கத்தில் அமர்ந்து கதறி துடித்துக் கொண்டிருந்த 19 வயது கணவன்.. விசாரணையின் இறுதியில் அரங்கேறிய மெகா ட்விஸ்ட். மனைவியை மர்ம நபர்கள் கொன்று விட்டதாக ஆக்டிங் செய்த கணவன் போலீசில் சிக்கியது எப்படி? மனைவியை கணவரே கொடூரமாகக் கொன்றது ஏன்? அய்யோ... என் மனைவிய இப்படி அநியாயமா கொன்னு போட்டுட்டாங்களேன்னு நடுராத்திரியில, இளைஞர் ஒருத்தரு கத்திக் கதறுற சத்தம் கேட்டுருக்கு. இந்த நேரத்துல, என்ன சத்தம்ன்னு அக்கம் பக்கத்துல உள்ளவங்க, வீட்ட விட்டு வெளிய வந்து, சுத்தி முத்தி பாத்துட்டு இருந்தாங்க. அதுக்குள்ள, கத்திக் கதறிட்டு இருந்த அந்த இளைஞரே, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணிருக்காரு. அதுக்கப்புறம் சம்பவ இடத்துக்கு வந்து போலீஸ் பாத்தப்ப, அந்த வீட்டுக்குள்ள 17 வயசான சிறுமி கழுத்து அறுபட்ட நிலையில, இறந்து கிடந்திருக்காங்க. அவங்க பக்கத்துல, கணவர் சுமன் கதறித்துடிச்சு அழுதுட்டு இருந்துருக்காரு.கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், கணவன் கிட்ட போய், என்ன நடந்துச்சுன்னு போலீஸ் விசாரிச்சிருக்காங்க. அப்போ, நைட் தூங்கிட்டு இருக்கும்போது, யாரோ கதவ தட்டுனதாவும், மனைவி அன்ஷிகா, கதவ திறந்ததும் மர்ம கும்பல் என் மனைவிய கழுத்தறுத்து கொன்னுட்டதாவும் சொல்லிருக்காரு. மனைவியோட சத்தம் கேட்டு அந்த கும்பல தடுக்கப் போனதாவும், அப்போ அந்த மர்ம நபர்கள், தன் உடம்புலயும் கத்தியால குத்துனதாகவும், அக்கம் பக்கத்துல இருந்து, சத்தம் கேட்டதால அவங்க பயந்து ஓடிட்டதாகவும் சொல்லிருக்காரு. சுமன் சொன்னத வச்சு பாத்தப்ப, கொள்ளையடிக்கிற முயற்சில தான் மர்ம கும்பல், அன்ஷிகாவ கொன்னுப்பாங்கன்னு நினச்சு விசாரணையில இறங்குனாங்க. ஆனா, விசாரணையோட முடிவுல, கேஸே தலைகீழ மாறிரும்னு போலீஸ்காரங்களே நினச்சிருக்க மாட்டாங்க. வீட்டுல சுமனும், மனைவி அன்ஷிகாவும் மட்டும் தான் இருந்துருக்காங்க. இந்த நிலையில தான், நைட் நேரம் யாரோ சிலர் கதவ தட்டுனதாகவும், அன்ஷிகா கதவ திறந்தப்ப, அந்த கும்பல் கத்தியால கழுத்தறுத்து அன்ஷிகாவ கொன்னுட்டதாகவும் சுமன் சொல்லிருக்காரு. இந்த அடிப்படையில போலீஸும் விசாரணை நடத்துனாங்க. ஆனா, வெளியாட்கள் வந்து போனதுக்கான எந்த தடயமுமே போலீஸுக்கு சிக்கல. கடைசியில, சுமன் சொன்ன நேரத்துல, அவர் வீட்டுக்குள்ள மட்டுமில்ல, வீடு இருக்குற ரோட்டுலேயே எந்த வெளியாட்களும் வந்து போகலங்குறது உறுதியாகிருக்கு. வெளியாட்கள் யாருமே வரலன்னு, அப்போ கணவரே கொன்னுட்டு நாடகமாடுறாரோன்னு போலீஸுக்கு டவுட் வந்திருக்கு. அந்த நேரத்துல, உயிரிழந்த அன்ஷிகாவோட அம்மா, தன்னோட மகளுக்கும், அவனோட காதலன் சுமனுக்கும் கல்யாணம் பண்ணிக்கிறது தொடர்பா அடிக்கடி தகராறு நடந்துட்டு இருந்ததாவும், என் பொண்ண சுமன் தான் கொன்னுருப்பான்னும் சொன்னாங்க. ஏற்கெனவே சுமன் மேல போலீஸுக்கு டவுட் இருந்த நிலையில, அன்ஷிகாவோட அம்மா சொன்ன குற்றச்சாட்டால, போலீஸுக்கு சுமன் மேல இருந்த சந்தேகம் அதிகமாகிருக்கு. அடுத்தது, அவன பிடிச்சு விசாரிச்சப்பதான், உண்மை என்னங்குறது தெரிய வந்திருக்கு.ஜார்க்கண்ட் மாநிலம், புரானா ராய்தி-ங்குற கிராமத்த சேர்ந்த 19 வயசான சுமனும், பக்கத்து கிராமத்த சேர்ந்த அன்ஷிகாவும் லவ் பண்ணிட்டு இருந்துருக்காங்க. காதலிக்கும்போது எல்லை மீறி பழகுனதல, அன்ஷுகா கர்ப்பமா ஆகிட்டாங்க. கல்யாணத்துக்கு முன்னாடியே மகள் கர்ப்பமா ஆகிட்டான்னு தெரிஞ்சா சொந்தக்காரங்க, கிராமத்துல உள்ளவங்க முன்னாடி தலை காட்ட முடியாதுன்னு நினைச்ச அன்ஷிகாவோட அப்பா, மகள்னு கூட பாக்காம அன்ஷிகாவ அடிச்சு வீட்ட விட்டு விரட்டிட்டாரு. அவங்க அம்மா மட்டும்தான் அன்ஷிகாவுக்கு ஆதரவா இருந்துருக்காங்க. என்ன பண்றது எங்க போறது?ன்னு முழிச்சிட்டு இருந்த அன்ஷிகா தன்னோட காதலன் சுமன் கிட்ட நடந்தத சொல்லி அழுது இருக்காங்க. ஆனா, சுமனோ காதலி கர்ப்பமானதுக்கு அப்புறம் அவங்கள கண்டுக்கல. அதனால, ஆத்திரமடைஞ்ச அன்ஷிகா, காதலன் சுமன் வீட்டுக்கு போய் சண்ட போடவே, சுமன் ஒருவீட்ட வாடகைக்கு எடுத்து அன்ஷிகாகூட வாழ்ந்துட்டு இருந்துருக்கான். அக்கம்பக்கத்துல உள்ளவங்க கிட்ட கணவன் - மனைவின்னு சொல்லிதான் சுமன் வாடகைக்கு வீடு எடுத்திருக்கான். ஒரே வீட்டுல வாழ்ந்துட்டு வந்த சுமன் - அன்ஷிகாவுக்கு இடையில அடிக்கடி கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. அஞ்சு மாசம் கர்ப்பமா இருக்கேன், என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு தெனம் தெனம் சுமன்கிட்ட கேட்டுருக்காங்க அன்ஷிகா. ஆனா, சுமனுக்கு அன்ஷிகாவ கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்ல. அதனாலதான், தகராறு ஏற்பட்டிருக்குது.இப்படியே சண்டையும் சச்சரவுமா போய்ட்டு இருந்த நிலையில, சம்பவத்தன்னைக்கு நைட்டும் அன்ஷிகா, காதலன் சுமன்கிட்ட சண்ட போட்டுருக்காங்க. அப்போ சுமன் ஒண்ணு சொல்ல, அன்ஷிகா ஒண்ணு சொல்ல-ன்னு பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. அப்போ, திடீர்னு ஆவேசமடைஞ்ச சுமன், வீட்டுல இருந்த கோடாரிய எடுத்து, அஞ்சு மாச கர்ப்பமா இருந்த காதலி அன்ஷிகாவ கழுத்த அறுத்து கொன்னுருக்கான். அடுத்து, யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுங்குறதுக்காக, அதே கோடாரியால தன் உடம்புலயும் ஒருசில இடங்கள்ல லேசா குத்திட்டு, மர்ம நபர்கள் உள்ள புகுந்து மனைவிய கொன்னுட்டதா நாடகம் ஆடிருக்கான் சுமன். விசாரணையில, சுமன்தான் கொலையாளிங்குறத கண்டுபிடிச்ச போலீஸ், அவன அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல தள்ளிட்டாங்க. இதையும் பாருங்கள் - பைக் ரேஸால் வந்த வினை, அண்ணன் உயிர் போயிடுச்சு, எதாச்சும் நடவடிக்கை எடுங்க...