திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி போலியானது என்றும், அதிமுகவினரின் வாக்குகள் கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சாடினார். தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பான்மையானவற்றை திமுக அரசு நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, நெல்லை அல்வா சாப்பிட்ட முதலமைச்சர் தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்து வருவதாக விமர்சித்தார்.