விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னரும், மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக்கும் இணைந்து நடனமாடிய வீடியோ கவனம் ஈர்த்து வருகிறது. முதல்முறையாக விம்பிள்டன் பட்டம் வென்ற இருவரும், வெற்றியாளர்களுக்கு அளிக்கப்பட்ட பாரம்பரிய விருந்தில் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.