news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news விஜய்க்கு ஆதரவு ஏன்? காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் விளக்கம்
tv

Also Watch

tv

Read this

விஜய்க்கு ஆதரவு ஏன்? காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் விளக்கம்

பாஜகவை எதிர்த்து ஏன் பேசவில்லை?

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாஜக நுழைந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம் என்று காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் கூறி உள்ளார்.

தவெகவுக்கு ஆதரவு
திருச்சியை சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளருமான கிறிஸ்டோபர் திலக், திருச்சி விமான நிலையத்தில் கூறியதாவது:
தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு தெளிவு பிறக்கும். அடுத்த 10 நாட்களுக்குள் புதிய அரசு பொறுப்பேற்கும் என நம்புகிறேன். தவெகவிற்கு 35% வாக்குகளும், திமுகவிற்கு 30% வாக்குகளும் கிடைத்து உள்ளது. இது பாஜகவுக்கு எதிரான மக்களின் மனநிலையை காட்டுகிறது. பாஜக தமிழகத்தில் காலூன்றகூடாது என்ற நோக்கில் மக்கள் வாக்களித்து உள்ளனர். மதச்சார்பின்மையை பாதுகாக்கும் அரசு அமைய வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தவெகவுக்கு வழங்கி உள்ளது.

கூட்டணிக் கட்சியின் ஓட்டு
ராகுல் காந்தியின் அடிப்படை நோக்கம் பாஜகவின் நகர்வுக்கு முன் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டை சின்னாபின்னமாக்க வேண்டும் என பாஜக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதை தடுக்கவே நாங்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம். அதை சரியாக பயன்படுத்த வேண்டியது தவெகவின் கடமை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி வாக்குகள் மூலமாகத்தான் திமுகவில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட வெற்றிபெற்ற அனைவரும் கூட்டணி கட்சி வாக்குகள் மூலமாகத் தான் வெற்றி பெற்றனர்.

செலவு செய்யாத வேட்பாளர்கள்
ஆளும் கட்சியாக இருந்து தேர்தலை சந்தித்த திமுக வேட்பாளர்கள் பெருமளவில் பணம் செலவழித்து தான் போட்டியிட்டார்கள். ஆனால் விஜய் கட்சியில் உள்ளவர்கள் பெரும் செலவு செய்து போட்டியிடவில்லை. ஒரு சிலரை தவிர விசில் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யார் என்பது கூட மக்களுக்கு தெரியாது. ஆனாலும் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.
இதனால் செலவு செய்த பணத்தை திரும்ப எடுக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை. எனவே, இது ஊழலுக்கு வழிவகுக்காது. இதேபோல, ஆளும் கட்சியாக இல்லாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும், பொருள் செலவு செய்யாமல் வெற்றி பெற்றனர்.

ஒரு நடிகருக்கான ரசிகர் பட்டாளம்
தமிழகத்தில் பாஜக காலூன்றி விடக்கூடாது என்பதற்காகதான் ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளாக அரசியல் செய்தார். அதே போன்றுதான் காங்கிரஸும் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் ஏதேனும் குழப்பங்களை ஏற்படுத்தலாமா? என பாஜக முயற்சித்து வரும் நிலையில், அதனை முறியடிக்கும் விதமாகத்தான் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஒரு நடிகருக்கான ரசிகர் பட்டாளம் மற்றும் அரசுக்கு எதிரான மக்கள் நிலைப்பாடு போன்றவையும் தவெக வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

பாஜகவை எதிர்த்து ஏன் பேசவில்லை?
பாஜக காலூன்ற இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் இந்த முடிவை எடுத்து உள்ளது. காங்கிரஸ் சேர்ந்ததால் தவெகவிற்குள் பாஜகவால் நுழைய முடியாது. பாஜகவை எதிர்த்து விஜய் ஏன் பேசவில்லை? என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் தவெகவை நம்பவில்லை. அதே நேரத்தில் பாஜகவிற்கு எதிராக மக்கள் தவெகவிற்கு வாக்களித்து உள்ளதால் நாங்கள் அங்கு சேர்ந்து உள்ளோம். மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவிக்க வேண்டியது தவெகவினரின் கடமை.
இவ்வாறு கிறிஸ்டோபர் திலக் விளக்கம் அளித்தார். 

Related Link
விஜய்க்கு பெரும்பான்மை இல்லை - ஆளுநர் மாளிகை விளக்கம்

விஜய்க்கு பெரும்பான்மை இல்லை - ஆளுநர் மாளிகை விளக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்டிய திருமாவளவன்

11
29 mins agoshare
விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்டிய திருமாவளவன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved