கனிமொழி - ராகுல் காந்தி சந்திப்பை விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னை டெல்லிக்கு அடிமை எனக்கூறிவிட்டு திமுக தான் டெல்லிக்கு அடிமையாகியிருப்பதாக சாடியிருக்கிறார். "விஜய் நடிகர் தான், அரசியல்வாதியல்ல"மேலும், விஜயையும் காட்டமாக விமர்சித்துள்ள இபிஎஸ், கரூரில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் கூட சென்று சந்திக்காதவர் என்றும், அவர் சிறந்த நடிகராக இருக்கலாம் ஆனால் சிறந்த அரசியல்வாதி அல்ல என்றும் கூறி உள்ளார். விஜய் ஒரு தலைவரா?எனக்கு அரசியலில் 51 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அரசியல் என்று வந்துவிட்டால் மக்களை நேரில் சென்று சந்திக்க வேண்டும். கரூர் துயர சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத விஜய் ஒரு தலைவரா? அவர்களுக்கு ஆறுதல்கூட தெரிவிக்க முடியவில்லை, கட்சி நடத்தி என்ன செய்வது? கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை அனாதையாக்கிவிட்டார் என்றும் இபிஎஸ் விமர்சித்துள்ளார். Related Link பலமுறை கூறிவிட்டேன் - இபிஎஸ்