லெபனான் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் வாக்கி டாக்கிகள் மற்றும் பேஜர்கள் வெடித்து சிதறியதில் சுமார் 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெய்ரூட் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியதில் சுமார் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில் 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக உறுப்பினர்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்ட நிலையில் சுமார் 2800 பேர் காயமடைந்தனர். லெபனானில் ஆங்காங்கே வாக்கி டாக்கிகள் மற்றும் பேஜர்கள் வெடிப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர்.