ஹரியானாவைச் சேர்ந்த விவிடிஎன் டெக்னாலஜிஸ் நிறுவனம், 364 கோடி ரூபாய் முதலீட்டில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.பொள்ளாச்சி சிப்காட் வளாகத்தில் 87 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த தொழிற்சாலைக்காக, சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.இந்த தொழிற்சாலையில் ரேடியோ, ஆக்சஸ் பாயிண்ட், சுவிட்ச், கேமரா, டேப்லெட், லேப்டாப், TWS, ஸ்பீக்கர், சென்சார், ஜிபிஎஸ் டிராக்கர், இவி சார்ஜர் உள்ளிட்ட பல்வேறு மின்னணு உதிரி பாகங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.