திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். தமிழகத்திற்கு முதலீடுகளை பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கிருந்தபடி, தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் திமுகவின் பவளவிழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, அமெரிக்காவில் கையெழுத்தாகும் முதலீடுகள் பற்றி குழுவினருடன் பகிர்ந்து கொண்டார். மேலும், அமெரிக்க வாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பு பற்றியும், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றியும் தெரிந்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் உதயநிதிஸ்டாலின், எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்