வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள மாரீசன் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது.