திருப்பதி ஏழுமலையானை, நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ்கோபி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். திருமலையில் அதிகாலை நடைபெற்ற அர்ச்சனை சேவையில் குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்ட அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தரிசனத்திற்கு பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த சுரேஷ் கோபி, 12 ஆண்டுகளுக்குப் பின் திருமலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், மனது மிகவும் அமைதியாக இருப்பதை உணர முடிவதாகவும் கூறினார்.