அம்பேக்தருக்காக போராடிய திருமாவளவன் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டும் போராட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் மோடியின் 2024-ம் ஆண்டுக்கான நிறைவு மன் கி பாத் நிகழ்ச்சியை கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கேட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மற்ற வழக்குகளை போல அல்லாமல் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை சிறப்பு வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார்.