Also Watch
Read this
By: Manigandan Raja
டிடிவி தினகரனை கூட்டணியில் இணைத்தது ஏன்? என்பதற்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் பொது விவாதத்திற்கு அழைத்துள்ளார். இதுதொடர்பாக இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியை பார்க்கலாம்.

கேள்வி: இந்தியா டுடே கருத்துக்கணிப்பு குறித்த கேள்வி
இபிஎஸ் : நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு
அதிமுக வெற்றி பெற வேண்டுமென மக்கள் முடிவு
அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்
அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்

கேள்வி: டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்ந்தது குறித்த கேள்வி
இபிஎஸ் : காங்கிரஸ், திமுக கூட்டணி வைக்கவில்லையா?
எங்களுக்கும், டிடிவி தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இல்லை
வாக்குவங்கி அடிப்படையில் தான் கூட்டணி அமைக்கிறோம்
2021 தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தால் ஆளும் கட்சி
43 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக வந்திருப்போம்

கேள்வி: அதிமுக பாஜகவுக்கு அடிமை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்வி
இபிஎஸ் : திமுக தான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது
எந்த விதத்தில் அதிமுக பாஜகவின் அடிமை என்று சொல்கிறார்?
பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது
கேள்வி: இந்தி திணிப்பு தொடர்பாக எழுப்பிய கேள்வி
இபிஎஸ் : இந்தி திணிப்பை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ்
எதிர்ப்பு தெரிவித்து போராடிய திமுக தற்போது கூட்டணியில் உள்ளது

கேள்வி: திமுக, தவெக இடையே தான் போட்டி என விஜய் பேச்சு
இபிஎஸ் : விஜய் சொல்வதை நாங்கள் பொருட்டாகவே பார்க்கவில்லை
கேள்வி: முதலமைச்சர் யார்? பொது விவாதத்திற்கு தயாரா?
இபிஎஸ் : ஒரே மேடையில் விவாதம் செய்வதற்கு தயார்
எப்போது கூப்பிட்டாலும் நான் தயார் என்று பதில்
பல முறை விவாதத்திற்கு அழைத்ததாக பேச்சு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved