கணவனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்த மனைவி. மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீஸ். மனைவியின் செல்போன் உரையாடல்களின் அடிப்படையில் தீவிர விசாரணை. வீட்டிற்குள் ஒழித்து வைக்கப்பட்டிருந்த கணவனின் சடலம். ரத்த வெள்ளத்தில் கணவன் சடலமாக கிடந்த கொடூரம். அடுத்தடுத்த விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள். கணவனை கத்தியால் குத்தி கொலை செய்தது ஏன்? பின்னணி என்ன?போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காத மனைவி ஷில்பிஇரவு நேரம், பக்கத்து வீட்டுக்கு போன இளம்பெண் ஷில்பி சிங், வேலைக்கு போன தன்னோட கணவர், இப்ப வர வீட்டுக்கு வரல, ஃபோனும் ஸ்விட்ச் ஆப்ல இருக்குன்னு சொல்லிருக்காங்க. இதகேட்ட பக்கத்து வீட்டுக்காரங்களும், ஷில்பி சிங்கும் கணவர் அமித் சிங்க பல இடங்கள்ல தேடி அலைஞ்சுருக்காங்க. ஆனா எங்க தேடியும் அவர காணல. இதனால ஷில்பி சிங் தன்னோட கணவர காணும்ன்னு போலீஸ் ஸ்டேஷன்ல புகார் அளிச்சுட்டாங்க. இந்த புகார வாங்குன போலீஸ், அவர பத்திய எல்லா டீடைல்சையும் வாங்கிட்டு விசாரணையில இறங்குனாங்க. அப்ப மனைவி ஷில்பி யார் கூடவோ அடிக்கடி ஃபோன்ல பேசிட்டு இருந்துருக்காங்க. இத நோட் பண்ண போலீஸ், அவங்க கிட்ட விசாரணை பண்ணாங்க. அப்ப இளம்பெண் முன்னுக்கு பின் முரணா பதில் அளிச்சதாக கூறப்படுது. இதனால அவங்க மேல ஒரு கண்ண வச்ச போலீஸ் அமித் சிங்க தேடிருக்காங்க. ஆனா போலீசால அவர கண்டுபிடிக்க முடியல. இதனால இந்த வழக்கு தொடர்பா ஷில்பியவும் அடிக்கடி விசாரணைக்கு கூப்டுருக்காங்க. ஆனா போலீஸ் விசாரணைக்கு ஷில்பி ஒத்துழைக்காம இருந்துருக்காங்க.செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து விசாரித்த போலீஸ்இதனால, ஷில்பி மேல சந்தேகமடைஞ்ச போலீஸ், அவங்கள போலீஸ் ஷ்டேஷனுக்கு கூப்டு போய்ட்டு செல்போன வாங்கி அவங்களுக்கு யார் கிட்ட இருந்து அடிக்கடி ஃபோன் வந்துருக்கு, யார் லாஸ்ட்டா கால் பண்ணிருக்கான்னு மொத்த டீடைல்சையும் எடுத்து பாத்துருக்காங்க. அப்ப தீபக் சிங் கூட அவங்க அடிக்கடி பேசியிருந்தது தெரிய வந்துருக்கு. அடுத்து அவங்களோட செல்போன் உரையாடல்களையும் எடுத்து பாத்துருக்காங்க போலீஸ். அதுல தான் அமித் சிங் கொலை செய்யப்பட்டது தெரியவந்துருக்கு. அதுக்கடுத்து அமித்சிங்கோட உடல கைப்பற்றுன போலீஸ் ஷில்பி சிங்க கஸ்டடியில எடுத்து விசாரிக்க ஆரம்பிச்சாங்க.தீபக் சிங்குடன் தகாத உறவில் இருந்த ஷில்பி சிங்உத்தரபிரதேசத்துல உள்ள சுல்தானபூர் பகுதியை சேந்தவரு அமித் சிங். இவருக்கும் அதே பகுதியை சேந்த ஷில்பி சிங்கிற்கும் 12 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. இந்த தம்பதி குழந்தைங்க இருக்குன்னு கூறப்படுது. லாரி ஓட்டுநரான அமித்சிங் ராப்பகலா குடும்பத்துக்காக கஷ்டபட்டு உழைச்சுருக்காரு. இவரும் எதிர் வீட்ட சேந்த தீபக் சிங்கும் க்ளோஸ் பிரண்ட்ஸ். தீபக் சிங் அடிக்கடி இவரோட வீட்டுக்கு வர்றத போறதுமா இருந்துருக்காரு. அப்ப தீபக் சிங்கிற்கும், ஷில்பி சிங்கிற்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு. ரெண்டு பேரும் நெருங்கி பழகிருக்காங்க. இந்த பழக்கமே இவங்களுக்குள்ள கள்ளக்காதலா மாறிருக்கு. அடுத்து கணவன் வேலைக்கு போனதுக்கு அப்புறம் ஷில்பியோட வீட்டுக்கு அடிக்கடி போற தீபக் அவங்க கூட தனிமையிலையும் இருந்துருக்காரு. ஆனா இந்த விஷயம் அடுத்து கொஞ்சம் நாட்கள்ல கணவன் அமித் சிங்கிற்கு தெரியவந்துருக்கு.கள்ளக்காதலை கைவிட மறுத்த அமித்தின் மனைவிமனைவியோட கள்ளக்காதல தெரிஞ்சு கடும் கோபமான கணவன் அவங்கள போட்டு சரமாரியா அடிச்சு டார்ச்சர் பண்ணிருக்காரு. குடும்பத்துக்காக ராப் பகலா கஷ்டப்பட்டு உழைக்கிறேன், நீ எதிர் வீட்டுக்காரன் கூட ஜாலியா ஊர் சுத்திட்டு இருக்கியா, நீ எனக்கு துரோகம் பண்ணிட்ட, இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங் இதுக்கப்புறமும் நீ அவன் கூட பழகிட்டு இருந்தனா உன்ன உயிரோடை விட்டு வைக்கமாட்டேன்னு மிரட்டிருக்காரு. இதகேட்டு பயந்துபோன மனைவி கொஞ்சம் நாட்கள் மட்டும் தீபக் கூட பேசாம இருந்துருக்காங்க.மனைவி ஷில்பி சிங் கைது, தீபக் சிங்கை தேடும் போலீஸ்கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரியை முன்னிட்டு, அமித்தும் அவரேட மனைவியும் பக்கத்துல உள்ள கோயிலுக்கு போய்ருக்காங்க. அப்ப ரெண்டு பேருக்கு இடையில மறுபடியும் பிரச்னை ஏற்பட்டிருக்கு. அமித் தன்னோட மனைவிய எல்லார் முன்னாடியும் கன்னத்துல ஓங்கி அடிச்சுருக்காரு. இதனால அந்த கோபத்தோட வீட்டுக்கு போன மனைவி நடந்த எல்லாத்தையும் தன்னோட கள்ளக்காதலன் கிட்ட சொல்லி அமித்த கொலை பண்ண திட்டம் போட்ருக்காங்க. சம்பவத்தன்னைக்கு அமித் வீட்ல தூங்கிட்டு இருந்துருக்காரு. அப்ப தன்னோட காதலன போன் பண்ணி வரவச்ச ஷில்பி அவன் கூட சேந்து கணவன சரமாரியா தாக்கிருக்காங்க. அடுத்து ரெண்டு பேரும் சேந்து அமித்த கழுத்த நெரிச்சும் கத்தியால குத்தியும் கொன்னுருக்காங்க. அடுத்து சடலத்த அங்குள்ள ஒரு ரூம்ல மறைச்சு வச்ச தீபக் அங்கருந்து தப்பிச்சு போய்ட்டான். மனைவி ஷில்பி கணவன காணும்னு பக்கத்து வீட்டுக்காரங்க கிட்டயும், போலீஸ் கிட்டயும் பொய் சொல்லி நாடகமாடிருக்காங்க. ஆனா அவங்க அளிச்ச முன்னுக்கு பின் முரணான பதில வச்சு ஷில்பி தான் கொலையாளின்னு கன்பார்ம் பண்ண போலீஸ், தலைமறைவா இருக்குற தீபக் சிங்க தேடிட்டு இருக்காங்க. Related Link விருந்துக்கு சென்ற காதல் ஜோடி, விபரீதம்