ஐரோப்பிய பிராந்தியத்துக்கான பொதுவான ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். ஜொ்மனியின் முனிச் ((Munich)) நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், ஐரோப்பிய பிராந்தியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்லாண்டுகளாகத் தொடா்ந்துவரும் நல்லுறவு முடிவுக்கு வருவதை, அமெரிக்கா தெளிவுபடுத்தியதால் இனி ஐரோப்பியப் பிராந்தியம் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.