news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை"
tv

Also Watch

tv

Read this

"எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை"

மக்களவையில் மத்திய அமைச்சர் உறுதி

29

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இந்தியாவில், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று, மக்களவையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உறுதியாக தெரிவித்து உள்ளார்.

மக்களவையில் அமளி
எரிவாயு தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவையிலும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மக்களவையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி Hardeep Singh Puri பேசியதாவது:
மாற்று விநியோக பாதைகள் வழியாக தினமும் பெரிய அளவிலான திரவ இயற்கை எரிவாயு சரக்குகளை இந்தியா, இறக்குமதி செய்கிறது. நீண்ட காலப் போர் ஏற்பட்டாலும், இந்தியாவின் எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்புகள் இந்த நிலையை தக்க வைக்கப் போதுமானதாக உள்ளன.

மாற்று ஏற்பாடுகள்
அமெரிக்கா, நார்வே, கனடா, அல்ஜீரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து எரிவாயுவைப் பெறுவதன் மூலம் கொள்முதல் ஆதாரங்களை நாங்கள் விரிவுபடுத்தி உள்ளோம். இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் முழு திறனையும் பயன்படுத்தி இயங்கி வருகின்றன. பல இடங்களில் அவை 100% திறனுக்கும் அதிகமாகச் செயல்படுகின்றன.
இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Related Link
எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ராகுல் பங்கேற்பு

எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ராகுல் பங்கேற்பு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
12 hrs 22 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved