திருப்பதியில் பக்தர்கள் தங்கி இருந்த தனியார் ஹோட்டல் அறையின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்கியிருந்த அறையில் நள்ளிரவு நேரத்தில் மேற்பகுதி இடிந்து விழுந்ததில், பக்தர்கள் அலறி அடித்து க் கொண்டு வெளியே ஓடினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்து, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்