அக்டோபர் 2-வது வாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 23ஆம் தேதி மாநாடு நடைபெறுவதாக இருந்த நிலையில், காவல்துறை நிபந்தனைகளையும் மாநாட்டுக்கான ஏற்பாடுகளையும் செய்வதற்கு குறைந்த காலமே உள்ளதால் அக்டோபர் மாதம் மாநாட்டை ஒத்திவைக்க நிர்வாகிகளோடு நடிகர் விஜய் ரகசிய இடத்தில் வைத்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் மழைக்காலம் என்பதால், மாநாடு நடத்துவதற்கு ஏதுவாக இருக்குமா? என்பது தொடர்பாகவும் அதுமட்டுமின்றி தீபாவளியும் வருவதால் காவல்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் விஜய் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது