”தும் ஹி ஹோ...” என்ற ஒரே ஒரு பாட்டு மூலமா ஓட்டுமொத்த உலகத்தையும் கட்டுக்குள்ள கொண்டு வந்தவர் பிரபல பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங். மனச சக்கையா பிழியக்கூடிய வசீகர குரலுக்கு சொந்தக்காரரான இவரு, இப்போ தன்னோட 38ஆவது வயசுலயே Playback singing-ல இருந்து ஓய்வ அறிவிச்சிருக்குறது ரசிகர்கள் மட்டுமில்ல, சினிமா இண்டஸ்ட்ரியவே அதிர்ச்சியில ஆழ்த்தியிருக்கு. 2005ஆம் ஆண்டு தொடக்கம்மேற்கு வங்கத்தின், ஜியாகன்ஜ் என்ற பகுதியில பிறந்த அர்ஜித் சிங், தன்னோட பாடகர் பயணத்த 2005ம் ஆண்டு ’FAME GURUKUL’ என்ற ரியாலிட்டி ஷோ மூலமா தொடங்குனாரு. இதையடுத்து 2011ம் ஆண்டு “Murder 2” என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவுல தன்னோட இசைப் பயணத்தை தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்கும் மேல Successful- ஆ கரியரோட உச்சத்துல இருக்கும் அர்ஜித், இப்போ திடுதிப்புனு தன்னோட ஓய்வ அறிவிச்சிருக்குறது ரொம்பவே ஷாக்கிங்கா தான் இருக்கு. ‘தும் ஹி ஹோ...’இவரோட இசை பயணத்துல ஒரு மைல் கல். ஒரு Turning Point எதுன்னு பார்த்தா, கொஞ்சம் கூட சந்தேகமே இல்ல. ‘தும் ஹி ஹோ’ பாட்டு தான். ’ஆஷிக்கி 2’ படத்துல இடம் பெற்றிருக்கும் இந்த பாடல் மூலமா உலகத்தோட மூலை முடுக்கெல்லாம் ரசிகர்கள சம்பாதிச்சாரு அர்ஜித் சிங். இவரோட குரல்ல அப்படி என்ன மாய மந்திரம் இருக்குதோ தெரியல. ரசிகர்கள பித்து பிடிக்க வச்சாருன்னு தான் சொல்லணும். அர்ஜித் சிங் பதிவு, அதிர்ச்சிதும் ஹி ஹோவ தொடர்ந்து, சன்னா மேரெயா(Channa Mereya), கேசரியா(Kesariya), முஸ்குரானே(Muskuraane) உள்ளிட்ட பாடல்கள் இவரோட குரல்ல முத்திரை பதிச்ச பாடல்கள். இப்படியான ஒரு Successful கரியரை விட்டு போவதா அர்ஜித் சிங் எடுத்திருக்கும் முடிவ, யாருமே கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. இது தொடர்பா தன்னோட சோஷியல் மீடியா பக்கத்துல பதிவு ஒன்ற வெளியிட்டிருக்கும் அர்ஜித் சிங், “எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வளவு வருஷமா எனக்கு ஆதரவையும் அன்பையும் கொடுத்த உங்க எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றி. இது ஒரு அற்புதமான Journey. ஒரு Playback singer-ஆ என்னோட பயணத்தை நான் இதோட முடிச்சிக்குறேன். ஏற்கனவே கொடுத்த கமிட்மெண்ட்ஸ் தாண்டி, புதுசா எந்த Projects-ம் எடுக்கப் போறது இல்ல, நன்றி”ன்னு சொல்லிருக்காரு. இசைப்பயணம் எப்போதுமே தொடரும்மேலும், தான் ஒரு Playback Singer-ஆ தான் ஓய்வு பெற்றிருப்பதாவும், தன்னோட இசைப்பயணம் எப்போதுமே தொடரும்-னு சொல்லிருக்கும் அர்ஜித் சிங், சினிமாவுல இன்னும் நிறைய புதிய குரல்கள கேட்க விரும்புவதாவும் தெரிவிச்சிருக்காரு. இவரோட இந்த முடிவால் மனமுடைந்து போன ரசிகர்கள் தங்களோட வருத்தங்களை தெரிவிச்சிட்டு வர்றாங்க. இது ஒரு Prank -ஆ இருக்கக்கூடாதா?ன்னு ஏக்கத்தையும் வெளிப்படுத்தி வர்றாங்க. ‘நான் உன் அழகினிலே...’இவ்வளவு பிரபலமான அர்ஜித் சிங், தமிழ் பாடல் எதுவும் பாடுனது இல்லையானு நீங்க யோசிக்கலாம்? அது எப்படி பாடாம இருந்துருப்பாரு? 2016ல சூர்யா நடிப்புல வெளியான ‘24’ படத்துல ‘நான் உன் அழகினிலே...’ பாடல பாடி, திகட்ட திகட்ட காதல் கொடுத்தவரு சாட்சாத் அர்ஜித் சிங்-தான். Related Link NLC நிறுவனத்தில் ரூ.442 கோடி ஊழல்?