மூதாட்டியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த உறவினர்கள். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை. ஃபாஸ்ட் புட் கடைக்குள் சென்ற மூதாட்டி, அதன்பின் கடையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம். தாய், தந்தை, மகன் என மூன்று பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்து சடலத்தை குழி தோண்டி புதைத்ததாக அதிர்ச்சி வாக்குமூலம். மூதாட்டி கொலை செய்யப்பட்டது ஏன்? கொலைக்கான கொடூர பின்னணி என்ன?ஃபாஸ்ட் புட் கடைக்குள் சென்ற மூதாட்டி அனசூயம்மாதிருமலகிரி பகுதிய சேந்த அனசூயம்மா-ங்குற மூதாட்டிய ரெண்டு, மூனு நாட்களா காணும். இதனால அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க அனசூயம்மா காணாம போன விஷயத்த அவங்க சொந்தக்காரங்க கிட்ட சொல்லிருக்காங்க. அத கேட்டு திருமலகிரிக்கு வந்த சொந்தக்காரங்க, எல்லா இடங்கள்ளையும் தேடி பாத்துருக்காங்க. ஆனா எங்க தேடியும் அனசூயம்மாவ காணல. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், மூதாட்டி எங்க போனாங்கன்னு கண்டுபிடிக்க அந்த ஏரியாவுல உள்ள சிசிடிவி காட்சிகள எடுத்து பாத்துருக்காங்க. அப்ப அதே பகுதியில உள்ள தனலட்சுமி பாஸ்ட் புட்-ங்குற கடைக்குள்ள மூதாட்டி போன காட்சி பதிவாகியிருந்துருக்கு. ஆனா அதுக்கப்புறம் மூதாட்டி அந்த கடையில் இருந்து வெளிய வரவேயில்லை. இதனால போலீசார் முதல்ல கடை உரிமையாளரான ராமலு, தனலட்சுமி, அவங்களோட மகன கூப்டு விசாரிச்சுருக்காங்க. விசாரணையில, மூதாட்டிய எங்களுக்கு யாருனே தெரியாதுன்னு அந்த மூணு பேரும் சொல்லிருக்காங்க.முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம்அதுக்கு போலீஸ், இதே ஏரியாவுல தான் அந்த மூதாட்டியும் இருக்காங்க, அவங்கள ஒருமுறை கூட நீங்க பாத்தது இல்லையான்னு கேட்ருக்காங்க. அப்ப மூதாட்டிய எங்க கடைக்கு வந்துருக்காங்க, ஆனா அவங்க கிட்ட பேசுனது கிடையாதுன்னு சொல்லிருக்காரு ராமலு. முதல்ல கேட்கும் போது மூதாட்டிய யாருனே தெரியாதுன்னு சொன்னிங்க, இப்ப மூதாட்டி கடைக்கு வந்துருக்காங்கன்னு சொல்ரிங்க, எதுக்கு இப்படி மாத்தி மாத்தி பேசுறிங்கன்னு கேட்ருக்காங்க போலீஸ். அப்ப கணவனும், மனைவியும் முன்னுக்கு பின் முரணா பதில் அளிச்சதா கூறப்படுது. இதனால அவங்கள கஸ்டடியில் எடுத்த போலீஸ் தங்களோட பாணியில மூணு பேர் கிட்டயும் விசாரணையில இறங்குனாங்க.ஃபாஸ்ட் புட் கடை நடத்தி வந்த ராமலு - தனலட்சுமிதெலங்கானா திருமலகிரி பகுதிய சேந்த ராமலு - தனலட்சுமி தம்பதிக்கு ஒரு மகன் இருக்கான். இந்த தம்பதி சமையலராக வேலை பாத்துட்டு இருந்துருக்காங்க. இதுக்கிடையில சொந்தமா தொழில் செய்ய ஆசைப்பட்ட தம்பதி, ப்ரன்ட்ஸ், உறவுக்காரங்கன்னு எல்லார் கிட்டயும் கடன வாங்கி அதே பகுதியில தனலட்சுமி பாஸ்ட் புட்ன்னு கடை ஒன்ன ஆரம்பிச்சுருக்காங்க.கடன் நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த தம்பதிஆனா ஃபாஸ்ட் கடை மூலமா இவங்களுக்கு அதிக லாபம் கிடைக்கல. கிடைக்குற கொஞ்சக் காசையும் ராமலுவும், அவரோட மகனும் குடிச்சே அழிச்சுருக்காங்க. வாங்குன கடன்ன திரும்பி கொடுக்காததால கடன் காரங்க எல்லாரும் டெய்லி கடைக்கு போய்ட்டு பணத்த கேட்டு பிரச்னை பண்ண ஆரம்பிச்சுருக்காங்க. இதுக்கிடையில அதே பகுதியை சேந்த அனசூயம்மா-ங்குற மூதாட்டி, ராமலுவுக்கு பழக்கம் ஆகிருக்காங்க. மூதாட்டி கொஞ்சம் வசதியா இருந்ததால அவங்க கிட்டயும் ராமலு கடன் வாங்கியிருந்ததா கூறப்படுது. அதே மாதிரி அனசூயம்மா, ரேஷன் கடைகள்ளல வாங்குற அரசி உள்ளிட்ட பொருட்கள ராமலுவுக்கு வித்தும் பணமா வாங்கிட்டு இருந்துருக்காங்க. ஆனா அந்த பணத்தையும் ராமலு மூதாட்டிக்கு கரைக்கடா கொடுக்க மாட்டார்ன்னு கூறப்படுது. இந்த நிலையில, ராமலுவுக்கு கடன் நெருக்கடி ரொம்ப அதிகமாகிருக்கு. இதனால இந்த தம்பதி, கடனை அடைக்க ஒரு திட்டத்த போட்ருக்காங்க.கடனை அடைக்க பலே திட்டம் போட்ட ராமலுமூதாட்டி அனசூயம்மாவுக்கு சொந்தக்காரங்கன்னு யாருமே இல்லை, அவங்களுக்கு என்ன ஆனாலும் யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க, அதனால மூதாட்டிய கொலை செஞ்சு, அவங்க கழுத்துல போட்டிருந்த நகை எல்லாத்தையும் திருடி, கடன அடைக்க முடிவு பண்ணிருக்காங்க. சம்பவத்தன்னைக்கு மூதாட்டிக்கு ஃபோன் பண்ண ராமலு, வட்டிப்பணத்த வந்து வாங்கிட்டு போகும்படி சொல்லிருக்காரு. அத நம்பி மூதாட்டியும் அந்த கடைக்கு போய்ருக்காங்க. கடைக்குள்ள போன உடனையே கடையோட ஷட்டர மூடிருக்காங்க தனலட்சுமி. அதபாத்து பயந்துபோன மூதாட்டி எதுக்கு கடை ஷட்டர மூடுறிங்க, என்னோட பணத்த கொடுங்க நான் கிளம்புறேன், எனக்கு நிறைய வேலைகள் இருக்குன்னு சொல்லிருக்காங்க. ஆனா அத எதையும் காதுல வாங்கத அந்த ராமலுவும், அவரோட மகனும் மூதாட்டிய சரமாரியா அடிச்சுருக்காங்க. Related Link குடும்பத்தை எரிக்க முயன்ற குட்டி துர்கா ராமலு, தனலட்சுமி உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீஸ்அடுத்து அவங்க கழுத்துல அணிஞ்சுருந்த 3 பவுன் தங்க நகை, கம்மல், மோதிரம்ன்னு எல்லாத்தையும் கழட்டி எடுத்த நபர்கள், மறைச்சு வச்சுருந்த கத்தியால மூதாட்டிய கழுத்தறுத்து கொன்னுட்டு சடலத்த கடைக்கு பின்புறத்துல குழிதோண்டி புதைச்சுட்டாங்க. அடுத்து யாருக்கும் சந்தேகம் வந்திறக்கூடாதுன்னு அந்த இடத்துல பீர் பாட்டில், குப்பை எல்லாத்தையும் போட்டுட்டு வழக்கம் போல கடைய நடத்திட்டு இருந்துருக்காங்க. மூணு நாளைக்கு அப்புறம் மூதாட்டிய காணும்ன்னு சொந்தக்காரங்க போலீஸ் ஸ்டேஷன்ல புகார் அளிச்சுருக்காங்க. இத கேட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சிசிடிவி காட்சிகள ஆய்வு பண்ணி ராமலு, தனலட்சுமி, அவரோட மகன்னு மூணு பேரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. Related Link இன்ஸ்டா காதலால் பறிபோன உயிர்