news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news திமுக கூட்டணி தயவுடன் தவெக ஆட்சி - மு.க.ஸ்டாலின் பேச்சு
tv

Also Watch

tv

Read this

திமுக கூட்டணி தயவுடன் தவெக ஆட்சி - மு.க.ஸ்டாலின் பேச்சு

ஆட்சி முக்கியமில்லை...

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக ஆட்சி அமைய வேண்டும் என நினைத்து மக்கள் வாக்களித்த கூட்டணியின் தயவுடன் தான் தவெக ஆட்சி அமைத்திருப்பதாக மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். ஜனாதிபதி ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு அளித்ததாகவும் இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் எனவும் உறுதி தெரிவித்தார்.

திமுகவில் இணைந்த...
சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாற்றுக்கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; திமுகவை பொறுத்தவரை எப்போதுமே வெற்றி, தோல்வி மாறி மாறியே வரும். தோல்வியை கொண்டு ஒருபோதும் துவண்டு விட மாட்டோம்.

பதவி, சொகுசு வாழ்க்கைக்காக...
பொதுவாக, சுயலாபத்துக்காக ஆளுங்கட்சிக்கு மாற்றுக்கட்சியினர் செல்வார்கள். வேறு கட்சிக்கு செல்வதால் கிடைக்கும் லாபம் மற்றும் அதிகாரத்தை மனதில் வைத்துத் தான் செல்வார்கள். அதிலும் ஆளும் கட்சியை நோக்கித் தான் அதிகம் செல்வார்கள். ஆனால் இன்று தி.மு.க.வை நோக்கி வருகிறார்கள் என்றால், பதவிக்காகவோ, சொகுசான வாழ்க்கைக்காகவோ யாரும் வரவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

ஆட்சி முக்கியமில்லை...
எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் கூட தற்போது திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைந்துள்ளதை நான் வரவேற்கிறேன். ஆட்சி முக்கியம் இல்லை, ஜனநாயகமே முக்கியம் என்று கருதியே அவசர நிலையை கலைஞர் கருணாநிதி எதிர்த்தார். எனவே திமுகவுக்கு எப்போதும் ஆட்சி முக்கியமில்லை குடியரசுத்தலைவர் ஆட்சி தமிழகத்தில் வந்துவிட கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு ஆதரவளிக்க கூட்டணி கட்சிகளை அனுப்பி வைத்தோம்.

எனவே திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். ஏனென்றால் திமுக வெற்றி பெற வேண்டும் என்று விரும்பிய கட்சிகளின் ஆதரவோடு தான் தற்போது தவெக ஆட்சி நடைபெறுகிறது. பாஜக வந்துவிட கூடாது என்பதற்காகவே கூட்டணி கட்சியினரை வழியனுப்பி வைத்தேன்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Link
அதிமுகவிலிருந்து தவெகவில் ஐக்கியம் யார் யார்?

அதிமுகவிலிருந்து தவெகவில் ஐக்கியம் யார் யார்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்

4
30 mins agoshare
"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved