சென்னை சேப்பாக்கத்தில் வரும் 25ம் தேதி நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து அன்றைய தினம் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இந்த டி20 தொடரில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியும், பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதவுள்ளது.