news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news டெட் (TET) தேர்வு இன்று முதல் விண்ணப்ப பதிவு துவக்கம்.
tv

Also Watch

tv

Read this

டெட் (TET) தேர்வு இன்று முதல் விண்ணப்ப பதிவு துவக்கம்.

TNTET - 2026

26

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tn

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TNTET - 2026) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

கட்டணம் செலுத்த ஏப்ரல் 10 இறுதி நாள்

இந்தத் தேர்வு தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படுகிறது.01.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ இடைநிலை ஆசிரியர்கள் (SGT), பட்டதாரி ஆசிரியர்கள் (BT Assistant) அல்லது அதற்கு இணையான பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் அல்லது பகுதிநேர அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களும் இதற்குத் தகுதியானவர்கள்.இன்று முதல் வரும் ஏப்ரல் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்த ஏப்ரல் 10-ம் தேதியே இறுதி நாளாகும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே... 

பொதுப் பிரிவினக்கு 600 ரூபாயும், SC, SCA, ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 300 ரூபாயுமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். தகுதியுள்ள ஆசிரியர்கள் trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் போது தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி அல்லது முதன்மைக் கல்வி அதிகாரி கையொப்பம் இட்ட Service Certificate பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
1 hr 2 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved