உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.