புரோ கபடி லீக் தொடரில், அரியானாவை வீழ்த்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. 12 அணிகள் பங்கேற்றுள்ள 12ஆவது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-29 என்ற புள்ளிக்கணக்கில் அரியானாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.