குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி உள்ளிட்ட கட்டணங்களை அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகள் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பில், குடிநீர் வாரியத்தால் அங்கீகரிக்கப்படாத நபர்கள், தொலைபேசி வாயிலாக நுகர்வோரை அணுகி குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டண நிலுவைத் தொகையை தங்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு Gpay, Phone pe, Paytm போன்ற UPI செயலிகள் மூலம் செலுத்துமாறு கேட்பதாகவும், தவறும் பட்சத்தில் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் கூறி பணம் பறிப்பதாக புகார்கள் வருவதாக தெரிவித்துள்ளது. எனவே, நுகர்வோர்கள் நிலுவைத் தொகையை செலுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.