Also Watch
Read this
Posted on: Jan 23, 2026 06:16 AM
By: Manigandan Raja
தமிழ்நாட்டில், ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டதாகவும், தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருப்பதாகவும் பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் சாதனையும், பிராந்திய பெரு விருப்பங்கள் மீதான அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட பதிவு
தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்து கொள்ள இருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
தே.ஜ.கூ. பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved