news-tamil-logo

3/18/2026, 2:52:22 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சாதி குறித்த பேச்சு, பார்த்திபன் வருத்தம்
tv

Also Watch

tv

Read this

சாதி குறித்த பேச்சு, பார்த்திபன் வருத்தம்

ஏதோ வாய்த் தவறி…

Posted on: Mar 18, 2026 07:11 AM

1

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சாதி குறித்து மேடையில் பேசியது சர்ச்சையான நிலையில், அதற்கு நடிகர் பார்த்திபன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஏதோ வாய்த் தவறி…
இதுதொடர்பாக, பார்த்திபன் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
சத்தியமாக சொல்கிறேன். எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல், வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை. அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த் தவறி… இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது.  

இது நடக்காது என உறுதியளிக்கிறேன்
‘இவன்’ உட்பட பல படங்களில், இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனே தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன்.

மிக மிக ஜாக்கிரதையாக...
என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன்.
இவ்வாறு பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

Related Link
மீண்டும் சர்ச்சையில் பார்த்திபன்

மீண்டும் சர்ச்சையில் பார்த்திபன்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
5 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved