நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம், வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படம், அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால், கங்குவா ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதனால் படத்தின் டிரெய்லரை பார்த்து உச்சபட்ச எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் கங்குவா படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாவதாக பிரத்யேக வீடியோவுடன் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.