தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தடை கோரி, திமுக உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை. லட்சக்கணக்கான படிவங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால் அதற்குப் போதிய அவகாசம் இல்லை என திமுக தரப்பு வழக்கறிஞர் வாதம். அதிமுக விரும்பும் மாடலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற வேண்டுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி. தனியாக ரிட் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் திமுக தொடர்ந்த வழக்கில் வாதிட அனுமதிக்க முடியாது எனவும் திட்டவட்டம். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்வதற்கு தடை இல்லை என தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 2 வாரத்தில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.