கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், கேரளாவின் மூணாறு பகுதியில் உள்ள சுற்றுலா தலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், இயற்கை அழகை கண்டு ரசித்தனர். குறிப்பாக ஏராவிகுளம் ராஜமலை தேசிய வனவிலங்கு பூங்காவில் உள்ள ஏராளமான வரையாடுகளை கண்டு ரசித்ததோடு, புகைப்படம் எடுத்து கொண்டனர். கடுமையான பனிமூட்டம் நிலவியதால் சுற்றுலா பயணிகள் ஜாலியாக நேரத்தை செலவிட்டனர்.