EVP FILM CITY உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி வழக்கில் திடீர் திருப்பம். கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக காஸ்டியூம் டிசைனர் மீது பரபரப்பு புகார். பாலியல் புகாரளித்த இன்ஸ்டா பிரபலம் மீது பதியப்பட்ட FIR.. இரண்டு பேரில் யார் சொல்வது உண்மை? நடந்தது என்ன?சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கத்துல உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில தான், டிவி ரியாலிட்டி ஷோஸ், திரைப்பட படப்பிடிப்பு நடக்குது. பல பிரபல படப்பிடிப்புகளுக்கு பெயர் போன இந்த ஈவிபி பிலிம் சிட்டியோட ஓனர் சந்தோஷ் ரெட்டி. இவரோட முதல் மனைவி விவாகரத்து வாங்கி விட்டுபோன நிலையில, ரெண்டாவது மனைவியும் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிருக்காங்க. இதுக்கு இடையில, கடந்த சில வாரத்துக்கு முன்னாடி பெங்களூரு வயாலிகாவல் ஸ்டேஷன்ல சந்தோஷ் ரெட்டி மேல, பிரபல காஸ்டியூம் டிசைனர் பார்வதி, கம்ப்ளைண்ட் ஒன்னு குடுத்திருந்தாங்க. சந்தோஷ் ரெட்டி தன்னைய காதலிக்கிறேன்னு சொல்லி, பாலியல் சீண்டல்ல ஈடுபட்டதாவும், காதல ஏத்துக்கலன தன்னோட ரெண்டு குழந்தைகளையும் கொன்னுடுவேன்னு கொலை மிரட்டல் விடுத்ததாவும் புகார் கொடுக்கப்பட்டுச்சு. அந்த புகார் அடிப்படையில, சந்தோஷ் ரெட்டி மேல கேஸ் ஃபைல் பண்ண வயாலி போலீஸ் விசாரணையில இறங்குனாங்க. மது போதையில கார ஓட்டி விபத்து ஏற்படுத்துறது, நில மோசடில ஈடுபட்றதுன்னு இப்படி பல சர்ச்சைகள சிக்குன சந்தோஷ் ரெட்டி மேல, பெங்களூரு போலீஸும் பாலியல் புகார் தொடர்பா வழக்குபதிவு பண்ண நிலையில, அவரு கடந்த சில வாரங்களா தலைமறைவா இருந்ததா காவல்துறை வட்டாரத்துல சொல்லப்பட்டுச்சு. இதுக்கு மத்தியில தான், தலைமறைவா இருந்ததா சொல்லப்பட்ட சந்தோஷ் ரெட்டி, காஸ்டியூம் டிசைனர் பார்வதி கம்ப்ளைண்ட் குடுக்குறதுக்கு முன்னாடியே, சென்னை நசரத்பேட்டை, ஆவடி காவல்நிலையங்கள பார்வதி மேல பண மோசடி புகார் குடுத்திருந்தது தெரிய வந்துருக்கு. குரோம்பேட்டைய சேர்ந்த 43 வயசான பார்வதியும் அவங்களோட கணவர் பார்த்திபனும் கடந்த நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நிகழ்ச்சிக்கு போனப்ப தான் அங்க ஈவிபி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டியோட அறிமுகமாகிருக்காங்க. தன்ன இன்ஸ்டா பிரபலம்னு காட்டிக்கிட்ட பார்வதி, பிரபலங்களுக்கு தான் ஆடை வடிவமைப்பதாவும், எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்தி வருவதாவும், A டூ Z ஈவண்ட்ஸ்-ங்குற பேர்ல திருமண ஏற்பாடு கம்பெனியையும் நடத்தி வருவதாவும் சொல்லி சந்தோஷ் ரெட்டிக்கிட்ட, பார்வதி காண்டாக்ட வளத்துருக்காங்க. இப்படி அறிமுகமான சந்தோஷ் ரெட்டியும், பார்வதியும் அடிக்கடி நேர்ல பாத்து பேசுறது, வீட்டுக்கு போறது, வர்றதுன்னு ஃபேம்லி ஃபிரண்ட்ஸாவும் இருந்துருக்காங்க. இதுக்கு நடுவுல, ஒருநாள் பார்வதிக்கு பிசினஸ் விஷயமா ஃபோன் பண்ணி பேசிருக்காரு சந்தோஷ் ரெட்டி. அப்போ, காட்ஸிலியான வாட்ச், பேக்லாம் தரமான முறையில நாங்களே எண்டர்பிரைசஸ் நிறுவனம் மூலமா வாங்கி தரமோனு சந்தோஷ் ரெட்டிக்கிட்ட பார்வதியும் அவங்க கணவர் பார்த்திபனும் சொன்னதாவும், அதுக்காக, தங்களோட பேங்க் அக்கவுண்டுக்கு மூணு கோடி ரூபாய உடனே அனுப்புங்கன்னு பார்வதி சொல்ல, சந்தோஷ் ரெட்டியும் பணத்த அனுப்பியதாவும் சொல்லப்படுது.பேங்க் அக்கவுண்ட்ல பெரிய தொகை இருந்தா வரி பிரச்சனை வரும்னு நினைச்ச பார்வதி, அந்த பணத்த திருப்பி சந்தோஷ் ரெட்டிக்கே அனுப்பி விட்டு, நேரடியா பொருள் வாங்குற கடையோட அக்கவுண்டுக்கு அனுப்பிடுங்கன்னு சொல்லிருக்காங்க. அதுக்குப்பிறகு, சந்தோஷ் ரெட்டிய பெங்களூருக்கு வர சொன்ன பார்வதி, அங்க உள்ள லூயி விட்டன் கடைக்கு கூப்பிட்டுப்போய் பல லட்சம் மதிப்புள்ள பிராண்டட் பொருட்களையும், நகைக்கடையில் கோடி மதிப்பில் நகையையும் வாங்கிருக்காங்க. இந்த பொருட்கள் எல்லாம் ஃபிளைட்ல எடுத்துட்டு போக முடியாது, இன்னொரு நாள் கார்ல வந்து இந்த பொருட்களாம் எடுத்துட்டு போங்க. அதுமட்டுமில்லாம, சில பொருட்கள் ஆர்டர் பண்ணிதான் வர வைக்கணும்னு சொல்லவே, சந்தோஷ் ரெட்டியும் அங்க இருந்து கிளம்பிட்டதா சொல்லப்படுது. அதுக்குப்பிறகு, கொஞ்ச நாளைக்கு அப்புறம் பார்வதிக்கு ஃபோன் பண்ண சந்தோஷ் ரெட்டி அந்த பொருட்கள பத்தி கேட்டுருக்காரு. அதுக்கு, பார்வதி அலட்சியமா பதில் சொல்லிட்டு, ஃபோன கட் பண்ணதாவும், அதனால, டென்ஷனான சந்தோஷ் ரெட்டி, பார்வதிக்கு மிரட்டல் விட்டுருக்காரு. அப்போ, பார்வதியோ பதிலுக்கு, உன் மேல பொய் புகார் கொடுத்து கம்பி எண்ண வச்சிடுவேன்னு மிரட்டல் விட்டுருக்காங்க. இதுக்கு நடுவுலதான், பார்வதி பெங்களூரு வயாலிகாவல் ஸ்டேஷன்ல சந்தோஷ் ரெட்டி மேல பாலியல் புகார் கொடுத்திருக்குறதாவும் சந்தோஷ் ரெட்டி தரப்புல சொல்லப்படுது. தன்பக்கம் உள்ள நியாயங்கள ஆதாரங்களோட நசரத்பேட்டை காவல்நிலையத்துக்கு எடுத்துட்டு போன சந்தோஷ் ரெட்டி, 3 கோடி மோசடி பண்ண பார்வதி மேல மறுபடியும் கம்ப்ளைட் குடுத்திருக்காரு. அந்த புகார் அடிப்படையில, பார்வதி மேல எஃப்ஐஆர் பதிவு பண்ண போலீஸ் விசாரணையில இறங்கிருக்காங்க. முழுமையான விசாரணை முடிஞ்சதுக்கு அப்புறம்தான் யார் சொல்றது உண்மை, யார் சொல்றது பொய்-ங்குறது தெரியவரும்னு போலீஸ் தரப்புல இருந்து சொல்லப்படுது. இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | கடனால் சைக்கோவான இளைஞர்..! அடுத்தடுத்து 2 பேர் கழுத்தறுத்து கொ*ல..! | Krishnagiri NewsTamil 24X7 3.84M subscribers