Also Watch
Read this
Posted on: Sep 12, 2024 04:53 AM
By: Srini Vasan
கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலை கொண்டு மோதியதோடு, தாக்குதலும் நடத்தினர்.
இதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த சக்திவேல், தேவராஜ், கார்த்திகேயன், சதீஷ் ஆகிய 4 பேர் பைபர் படகில் சென்று கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து மீனவர்கள் கடலில் விழுந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved