news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மீண்டும் வாய்ப்பு பெற்ற சிட்டிங் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
tv

Also Watch

tv

Read this

மீண்டும் வாய்ப்பு பெற்ற சிட்டிங் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

பென்னாகரத்தில் யார்?

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மொத்தம் 28 தொகுதிகளில், மேலூர் தொகுதி தவிர மற்ற 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது.

மீண்டும் வாய்ப்பு
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகைக்கும், கிள்ளியூரில் ராஜேஷுக்கும், வேளச்சேரியில் ஹசன் மவுலனானாவுக்கும் மீண்டும் போட்டியி வாய்ப்பு கிடைத்துள்ளது. அறந்தாங்கியில் ராமச்சந்திரன், காரைக்குடியில் மாங்குடி, சிவகாசியில் கணேசன் அசோகன், நாங்குநேரியில் ரூபி மனோகரன், ஸ்ரீ வைகுண்டத்தில் ஊர்வசி அமிர்தராஜ், திருவாடானை ராம கருமாணிக்கம் ஆகியோர் மீண்டும், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பென்னாகரத்தில் யார்?
பாமக ஜி.கே.மணியின் மகனும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவருமான ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் பென்னாகரத்தில் போட்டியிடுகிறார். மயிலாடுதுறையில் ஜமால் யூனுஸ் முகமது, உசிலம்பட்டியில் சரவணக்குமார், ஈரோடு கிழக்கில் கோபிநாத் பழனியப்பன் போட்டியிடுகின்றனர். சங்கரன்கோவிலில் சங்கை கணேசன், அம்பாசமுத்திரத்தில் வி.பி.துரை, ஊத்தங்கரையில் குப்புசாமி, சிங்காநல்லூரில் ஸ்ரீநிதிநாயுடு ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

விளவங்கோடு தொகுதியில் யார்?
ஆத்தூர் தொகுதியில் அர்த்தநாரி, உதகையில் ராமச்சந்திரன், கவுண்டம்பாளையத்தில் சூரியபிரகாஷ், துறையூரில் விச்சு லெனின் பிரசாத், குளச்சல் தொகுதியில் தாரகை கத்பர்ட் போட்டியிடுகின்றனர். கடலூர் ஏ.எஸ்..சந்திரசேகரன், விளவங்கோட்டில் டி.டி.பிரவீன், கிருஷ்ணகிரி செல்லக்குமார், பொன்னேரியில் துரை சந்திரசேகர், சோளிங்கரில் முனிரத்தினம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

Related Link
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதுச்சேயில் பிரதமர் மோடி ரோடு ஷோ

11
1 hr 11 mins agoshare
புதுச்சேரியில் பிரதமர் மோடி பேரணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved