news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு
tv

Also Watch

tv

Read this

வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு

காலையில் சரிவு, பிற்பகலில் உயர்வு

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
today evening god rate

தங்கம் விலை, இன்று காலையில் ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்த நிலையில் பிற்பகலில் விலை அதிகரித்து உள்ளது. ஒரு சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மார்ச்-25
ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 800 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 350 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-26
சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 9,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, 13,670 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில் சவரனுக்கு 2 ஆயிரத்து 560 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.320 சரிந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,350க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிலோ வெள்ளி ரூ,2,60,000க்கு விற்பனை ஆனது.

மார்ச்-27
சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 7,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 13,430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-28
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அதிரடியாக உயர்ந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-30 காலை
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-30 பிற்பகல்
தங்கம் விலை, காலையில் ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்த நிலையில் பிற்பகலில் விலை அதிகரித்தது. ஒரு சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.


ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
25 மார்ச் - ரூ.1,08,800
26 மார்ச் - ரூ.1,06,800
27 மார்ச் - ரூ.1,07,440
28 மார்ச் - ரூ.1,09,280
30 மார்ச் - ரூ.1,08,800 இன்று காலை
30 மார்ச் - ரூ.1,10,160 இன்று பிற்பகல்

Related Link
திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பெரம்பூரில் விஜய்க்கு ஓட்டு கிடைக்குமா என தெரியாது

0
7 mins agoshare
தவெக  விஜய்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved