Also Watch
Read this
By: Web Team

2025 ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ உயர் அதிகாரிகளை அதிகளவில் ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணிகளில் இடம் பெறாத 5 இளம் வீரர்களை பஞ்சாப் கிங்ஸ் அணியில் வைத்து விளையாடி, அவர்களை சிறப்பாக வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.
இந்த இறுதிப் போட்டியிலும் கடைசி பந்து வரை போராடிய அந்த அணி, வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வியை தழுவியது.
எனவே, அவரது கேப்டன்சி செயல்பாடு குறித்து பிசிசிஐ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆகவே, அவர் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் ரேஸில் இடம்பெறுவார் எனவும், டெஸ்ட் அணியிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved