ஒருநாள் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிகபட்ச பந்துகள் வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனை பட்டியலில் முகமது ஷமி இணைந்துள்ளார். நேற்றைய ஆட்டத்தின் போது, முதல் ஓவரை வீசிய முகமது ஷமி 5 WIDE பால்களை சேர்த்து மொத்தம் 11 பந்துகளை வீசினார். இதன் மூலம் ஒரு ஓவரில் அதிகபட்ச பந்துகள் வீசிய இந்திய வீரர்களான இர்பான் பதான் மற்றும் ஜாகீர் கானின் மோசமான சாதனையை முகமது ஷமி சமன் செய்துள்ளார்.