சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ரூபாய் 28 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஸ்ரீராம் குழும நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கி உள்ளதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் வழங்கி உள்ள நிலையில் வைத்திலிங்கத்தின் 2 மகன்கள் உட்பட 11 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது..