news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பாத் டப்பில் நடிகையுடன் ரோஸ் குளியல்
tv

Also Watch

tv

Read this

பாத் டப்பில் நடிகையுடன் ரோஸ் குளியல்

ஏங்ங்ங்ங்கககக... ஏங்கும் நெட்டிசன்கள்

106

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஒரே ஒரு வீடியோவால் தன்னையும், தனது சொந்த ஊரையும் பிரபலப்படுத்திக் கொண்ட கூமாபட்டி தங்கபாண்டி, துணை நடிகை சாந்தினியுடன் நெருக்கமாக குளியல் போடும் வீடியோ வெளியாகி நெட்டிசன்களை வாய் பிளக்க வைத்துள்ளது. சாதாரணமாக ரீல்ஸ் வீடியோ போட்டுக் கொண்டிருந்த தங்கபாண்டி, செலிபிரிட்டி தங்கபாண்டியாக மாறி கலக்கி வருவது குறித்து விவரிக்கிறது இந்த
செய்தித் தொகுப்பு.

கூமாபட்டிக்கு வாங்க...
திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் அதிஷ்டம் என ஊர் பக்கம் சொல்லும் பழமொழி யாருக்கு பொருத்தமாக இருக்கிறதோ, இல்லையோ கூமாபட்டி தங்கபாண்டிக்கு தான் பொருத்தமாக இருக்கும். சோஷியல் மீடியா வந்ததில் இருந்து, சின்ன விஷயம் கூட உலக அளவில் டிரெண்ட் ஆகி விடுகிறது.

அப்படி விருதுநகர் அருகே அமைந்துள்ள சாதாரண குக்கிராமத்தை குளோபல் லெவலில் டிரெண்ட் ஆக்கிய பெருமை தங்கபாண்டியவே சேரும். கூமாபட்டி என்ற அந்த கிராமத்திற்கு சமூக வலைதள வாசிகளை அழைத்து தங்கபாண்டியன் போட்ட வீடியோக்கள் எக்கச்சக்க ரீச்சை கொடுத்தது.
ஏங்கங்கங்கங்க... கூமாபட்டிக்கு வாங்க என்ற தங்கபாண்டியன் வாய்ஸ் மாடுலேஷனுக்கே பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. இதனாலேயே பலரும் வண்டியை கட்டிக் கொண்டு கூமாப்பட்டிக்கு டூர் கிளம்ப ஆரம்பித்தனர்.

கூமாபட்டி தங்கபாண்டியின் வீடியோ டிரெண்ட் ஆனது போல கூமாபட்டியும் டிரெண்ட் ஆக, அங்குள்ள பிளவக்கால் அணையை மேம்படுத்த தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியது. அதற்கு பிறகு தங்கபாண்டியனின் அடையாளமாக மாறியது அந்த ஏங்கங்கங்கங்க என்ற வார்த்தை. ரீல்ஸ் வீடியோ டிரெண்ட் ஆனதை தொடர்ந்து விளம்பரங்களில் நடிக்க தொடங்கிய கூமாபட்டி
தங்கபாண்டி, தனியார் தொலைக்காட்சியில் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் இணைந்தார். நிகழ்ச்சி பெயர் என்னவோ சிங்கிள் பசங்க தான். ஆனால், நிகழ்ச்சியில் சீரியல் நடிகை சாந்தினியுடன் சேர்ந்து தங்கபாண்டி அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போனது.

ஆன் ஸ்கிரீனில் தங்கபாண்டி - சாந்தினி இடையே இருந்த கெமிஸ்ட்ரி பார்வையாளர்களுக்கு பிடித்து போனாலும், பொறாமைப்படும் அளவுக்கு இருந்தது. நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு நடனம், நடிப்பு என எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட தங்கபாண்டியன் தான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

வீடியோ முழுக்க ரொமான்ஸ் மழை
இந்த நிலையில் தான், ரசிகர்கள் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டிக் கொள்ளும் வகையில் துணை நடிகை சாந்தினியுடன், கூமாபட்டி தங்கபாண்டியன் குளியலாடும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கில்லாடி ஜோடி நிகழ்ச்சிக்காக ஒட்டு மொத்த குழுவும் இலங்கை சென்றுள்ளது.

ஒரு பக்கம் நிகழ்ச்சிக்கான டாஸ்க் விறுவிறுப்பாக நடந்தாலும், சாந்தினியுடன் தங்கபாண்டியன் குதூகலித்து வருவது ரசிகர்களை பொறாமை கொள்ள செய்துள்ளது. சொகுசு விடுதியில் BATH TUB-ல் தங்கபாண்டியனும், சாந்தினியும் ஒன்றாக அமர்ந்து குளுகுளு குளியல் போட, வாட்டர் மெலன் ஜூஸை பரிமாறிக் கொள்ள என, அந்த வீடியோ முழுக்க ரொமான்ஸ் மழை அடித்து ஊற்றுகிறது.

திரைக்கு வெளியே நண்பர்களா? அல்லது காதலர்களா?
குளியல் டப்பாவுக்குள் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பார்த்து, இருவரும் உண்மையாகவே கமிட் ஆகி விட்டார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திரையில் கலகலப்பான ஜோடியாக இருக்கும் தங்கபாண்டியன் - சாந்தினி, திரைக்கு வெளியே நண்பர்களா? அல்லது காதலர்களா? என்பது போக போக தான் தெரியவரும்.

Related Link
தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு

தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 16042026

2
53 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved