தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயனை கிண்டல் செய்ததற்காக, அவரிடம் மன்னிப்பு கேட்டதாக ஆர்.ஜே பாலாஜி தெரிவித்தார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் எமோஷனலானதை கலாய்த்ததாக தெரிவித்த ஆர்.ஜே பாலாஜி, அப்போது அது தவறாக தெரியவில்லை என்றும், அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்னர்தான் தமது தவறை உணர்ந்ததாகவும் கூறினார்.