இந்தியாவில், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் விலை ஏற்றத்தை சந்தித்து வருவது நடுத்தர மக்களை நடுக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், நேற்று 29ஆம் தேதி, ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் சுமார் 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில், இனிமேல் தங்கம் விலை குறையவே வாய்ப்பு இல்லை என்ற பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு, எல்லாரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.விடியும் பொழுதில் அதிர்ச்சி ஒவ்வொரு நாளும் விடியும் பொழுது தங்கம் விலை ஏற்றம் என்ற செய்தி தான் கண் முன்னாடி வந்து நிற்கிறது. ஏழைகள், நடுத்தர மக்களை தாண்டி பணம் வைத்திருப்பவர்களே தங்கம் வாங்க யோசிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. எப்போது தான் தங்கத்தின் விலை குறையும் என்ற கேள்விக்கு விடை தெரியாத அளவுக்கு ஜெட் வேகத்தில் ஏறி வருகிறது. தங்கம் விலை... அச்சம்1990 கால கட்டத்தில் ஒரு சவரன் தங்கம் வெறும் 3 ஆயிரம், 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அடுத்த 30 ஆண்டுகளிலேயே ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் என்ற அளவிற்கு அசுர பாய்ச்சலில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ஆயிரத்து 190 ரூபாய் உயர்ந்து, 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரே அடியாக 9 ஆயிரத்து 520 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இத்தனை நாட்களாக சவரனுக்கு ஆயிரம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் என உயர்ந்து வந்த தங்கம் விலை திடீரென ஒரே நாளில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் ஏறியிருக்கிறது. தங்கம் என வாயால் சொல்லவே பயப்படும் அளவுக்கு ஆகிவிட்டது இந்திய மக்களின் நிலைமை.சுப நிகழ்ச்சிகளுக்கு செய்முறைஇந்திய மக்களுக்கு எப்போதுமே தங்கத்தின் மீதான ஈர்ப்பு அதிகம். தங்கம் ஒரு முதலீடு என்பதை தாண்டி சுப நிகழ்ச்சிகளுக்கு செய்முறையாக, வரதட்சனையாக தங்கம் தான் பயன்படுத்தப்படுகிறது என்பதால், அதிரடி விலை ஏற்றம் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையை பொறுத்தவரையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,600 டாலரை நெருங்கி, இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.போர் சூழல் காரணமாக...ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் காரணமாகவே தங்கத்தின் விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். இரு நாடுகள் இடையே சண்டை நடந்தால் பொருளாதாரத்தில் பாதிப்பு வரும் என்ற நிலையில், அமெரிக்கா மாதிரியான நாடு, ஈரானுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவது, பொருளாதாரத்தில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்து விலை ஏற்றத்திற்கு காரணமாக மாறியிருக்கிறது. போர் சூழல் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பும் வீழ்ச்சியை சந்திக்கிறது என்ற நிலையில், டாலரை நம்பி அந்நிய செலாவணி செய்யக்கூடிய நாடுகள் பாதிக்கக் கூடும் என்பதாலும் தங்கம் விலையில் ஏற்றம் காணப்படுகிறது.விலை உயர்வு தான் நீடிக்கும்பாதுகாப்பான முதலீடு என நம்பி முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வரும் நிலையில், போக போக தங்கத்தின் விலை உயருமே தவிர, குறைய துளி கூட வாய்ப்பே இல்லை என்கிறார்கள். வரும் காலங்களில் எந்த அளவுக்கு உயரும் என கணிக்க முடியாத அளவுக்கு தான் தங்கத்தின் விலை உயரக்கூடும் என வல்லுநர்கள் கூறுவது ஒரு வித அச்ச உணர்வை தான் ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தில் தங்கம் விலை குறைந்தாலும், பெரிய அளவில் வீழ்ச்சி இருக்காது எனவும், இனிமேல் விலை உயர்வு தான் நீடிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. வெள்ளி மீதான முதலீட்டில் தான் லாபம்தங்கத்தின் விலையுடன் போட்டி போட்டு வெள்ளி விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. அந்த வகையில் ஒரு கிராம் வெள்ளி 25 ரூபாய் உயர்ந்து 425 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 25,000 ரூபாய் உயர்ந்து 4 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீது முதலீடு செய்வது போல வெள்ளி மீதும் முதலீடு செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், தங்கத்தை விட வெள்ளி மீதான முதலீட்டில் தான் லாபம் அதிகமாக கிடைக்கும் எனவும் சொல்கிறார்கள்.வெள்ளிக்கு டிமாண்ட் முதலீடு என்பதை தாண்டி, தொழில் துறைகளில் வெள்ளி மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதால் விலை ஏற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில், சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், மருத்துவத் துறையில் பயன்பாடு, AI, DATA CENTRE ஆகிய துறைகளிலும் வெள்ளியின் பயன்பாடு இருக்கிறது. சோலார் பேனல் தயாரிக்க வெள்ளி கட்டாயம் என்ற நிலையில், EV என்ற மின்சார கார்களின் பேட்டரி, ரிங்க், சர்கியூட் ஆகியவற்றிலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், வெள்ளியின் தேவையும் அதிகரித்துள்ளது. அதேபோல, செல்போன், மடிக்கணினி, Chips போன்ற மின்னணு சாதனங்களிலும் வெள்ளி தான் பயன்படுத்த ப்படுகிறது. வெள்ளி மிகச்சிறந்த மின்சார கடத்தி என்பதால் மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது என்பதாலும் வெள்ளிக்கு டிமாண்ட் ஏறிக் கொண்டே செல்கிறது. இது போக, மெடிக்கல் துறையிலும் மருந்து, மாத்திரைகளுக்கு கோட்டிங் கொடுக்க சில்வர் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர்த்து, டேட்டா சென்டர்ஸ், ஆட்டோமேஷன் ஆகியவற்றிலும் HIGH PERFORMANCES-க்கு வெள்ளி தான் அவசியமாக பயன்படுத்தப்படுகிறது என்பதாலும் விலை ஏற்றம் கண்டு வருகிறது. வெள்ளியின் தேவை அதிகமாக இருக்கும் அளவுக்கு சப்ளை குறைவாக இருப்பதால் டிமாண்ட் அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது. எட்ட முடியாத உயரத்தை நோக்கி...தங்கம், வெள்ளி விலை ஏற்றத்திற்கு சர்வதேச அளவில் காரணங்கள் இருந்தாலும், பாதிக்கப்படுவது என்னமோ உள்ளூர் மக்கள் தான். சிறுவாடு காசு சேர்த்து வைத்து தங்கம் வாங்கிய நிலையெல்லாம் மலையேறி போய், எவ்வளவு சேர்த்தாலும் தங்கம் வாங்கவே முடியாது என்ற எட்ட முடியாத உயரத்தை நோக்கி தங்கம் விலை சென்று கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அதனை வைத்தும் தங்கத்தின் விலை உயரும் என கணிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் மீதான சுங்க வரியை குறைத்தாலும் கூட சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார சூழலுக்கு ஈடு கொடுக்க முடியாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து வருகிறது. Related Link பாதிக்கு பாதியாக சரிந்தது