ஹோலி தினத்தில் வண்ணப்பொடி பூசுவதை தடுத்த 25 வயது இளைஞரை மூன்று பேர் சேர்ந்து கொன்ற துயர சம்பவம் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் நடந்துள்ளது. ரல்வாஸ் என்ற கிராமத்தில் போட்டித் தேர்வுக்காக நூலகத்தில் ஹன்ஸ்ராஜ் என்ற இந்த இளைஞர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற அசோக், பப்லு, குல்ராம் ஆகிய மூன்று பேர் அவர் மீது வண்ணப்பொடிகளை தூவ முயன்றனர். அதை அவர் தடுத்த தால் ஆத்திரமடைந்த இந்த கும்பல் அவரை பெல்ட்டால் அடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இந்த கும்பலில் ஒருவன் ஹன்ஸ்ராஜின் கழுத்தை இறுக்கி கொன்று விட்டதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல் கிடைத்த தும் திரண்ட ஹன்ஸ்ராஜின் உறவினர்கள் அவரது உடலுடன் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.