கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலைக்கு நீதி கேட்டு திரையுலகினர், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இரவு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் திரண்ட அவர்கள் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு பேரணியாக சென்றனர்.பேரணியின் முடிவில் எஸ்பிளனேட் பகுதியில் அமர்ந்து இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் படுகொலை வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். பிரபல பெங்காலி இயக்குநர் பிர்சா தாஸ்குப்தா, நடிகர் சோகினி சர்க்கார், சுவஸ்திகா முகர்ஜி உள்ளிட்ட பலர் தர்ணாவில் ஈடுபட்டனர்.