அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என்பதற்காக விவசாயிகளுக்கான திட்டங்களை நிறுத்த கூடாது என்றும் நிதி ஒதுக்கி திட்டங்களை முடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில், அத்திகடவு - அவிநாசி குளம் காக்கும் இயக்கத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.